Jana Nayagan: புது ரெக்கார்ட் படைத்த ஜன நாயகன்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்.. ஆல் ஏரியாவும் தளபதியோடதுதான்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் படத்தை இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜன நாயகன் படம் ரிலீஸ்க்கு முன்னர் பல ரெக்கார்டுகளை படைத்து வரும் நிலையில் தற்போது புதிய ரெக்கார்டு ஒன்றை படைத்துள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு முந்தய வெள்ளிக்கிழமை படம் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடங்கியதிலிருந்தே பலவும் ரெக்கார்டுகளாகத்தான் உள்ளது. அதாவது, இது விஜய்யின் 69வது படம். அவரது திரை வாழ்க்கையில் இதுதான் தனது கடைசி படம் என்று அவரே அறிவித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான படம். இந்த படத்திற்கு மட்டும் விஜய் ரூபாய் 235 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓடிடி உரிமம்: சமீபத்தில் படக்குழு படத்தின் பாடல் ஒன்றை ரிலீஸ் செய்தது, அவை இதுவரை 57 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் ஐ.டி.இல் இருந்து பார்க்கப்பட்டது என்று யூடியூப் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமம் ரூபாய் 121 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே, இதுவரையில் ஒரு படத்தின் ஓடிடி உரிமம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, படத்தின் தியேட்டரிக்கல் உரிமமும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தியேட்டரிக்கல் உரிமம்: அவரது பதிவில், " விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ், ஒரே நபருக்கு வழங்காமல், ஐந்து விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டிருக்கிறது. சேலம், திருச்சி, மதுரை ஏரியா - ஃபைவ்ஸ்டார் செந்தில் மற்றும் நாராயணசாமி - 35 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியா - பிரதாப்
வட ஆற்காடு, தென் ஆற்காடு - எஸ் பிக்சர்ஸ் சீனு
கோவை - மன்னார்
சென்னை சிட்டி, செங்கல்பட்டு - ஏஜிஎஸ் மாலி
6 ஏரியாக்களின் விலை - 70 கோடி
மொத்தம் - 105 கோடி
அதிக விலைக்கு விற்பனை: தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் 105 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. வழக்கம்போல் வியாபாரத்தில் பென்ச்மார்க் கிரியேட் செய்திருக்கிறது விஜய் படம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் ஓடிடி விற்பனை, தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் விற்பனை என இரண்டிலும் பெஞ்ச் மார்க் பிசினஸ் செய்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











