ஜனநாயகனில் திமுகவை அட்டாக் செய்த விஜய்?.. தவெக கொடியும் வருதே.. ட்ரெய்லரில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

சென்னை: ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. அதனை பார்க்கையில் பகவந்த் கேசரி படத்தின் வாடை ஹெவியாக அடிக்கிறது என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் வகையிலான காட்சிகளையும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். காட்சிகள் மட்டுமின்றி வசனத்திலும் அரசியல் வாடை ஹெவியாக அடிப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. போட்டிக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியானாலும் கண்டிப்பாக தளபதி படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லாம் டிக்கெட் புக்கிங் ஜோராக நடந்துவருகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் பல கோடிகளை படம் அள்ளியிருப்பதாக திரையரங்கங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் எப்போது?: அந்த மாநிலங்களில் காலை ஆறு மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை காலை ஒன்பது காட்சிக்குத்தான் அரசு அனுமதி தரும் என்று தெரிகிறது. மேலும் நாளை முதல் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அரசியல் வருகை ஜனநாயகனின் ரிலீஸில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Jana Nayagan Trailer Out Vijay s Political Undertone and Bhagavanth Kesari Similarities Stir Buzz
Photo Credit:

ட்ரெய்லர் ரிலீஸ்: படத்துடைய ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் மொத்தம் 90,000 பேர் வரை கலந்துகொண்டார்கள் என கூறப்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்திருந்தது. எனவே மாலை 6.45 மணியை வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தார்கள் தளபதியின் ரசிகர்கள்.

எப்படி இருக்கிறது ட்ரெய்லர்: இரண்டு நிமிடங்கள் 52 வினாடிகள் ஓடும் ட்ரெய்லரில் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இருக்கின்றன. விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் வழக்கம்போல் பட்டாசாக இருக்க; அனிருத்தின் பின்னணி இசையும் பட்டையை கிளப்புகின்றன. நிச்சயம் படம் மெகா ஹிட்தான் என்று விண்ணளவு நம்பிக்கையை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் ட்ரெய்லரை பார்க்கையில் படத்தில் பகவந்த் கேசரி வாடை ஹெவியாக அடிக்கும் என்பதும் உறுதியாகியிருக்கிறது.

திமுக மீது அட்டாக்?: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் பல திமுகவை அட்டாக் செய்வதாக இருக்கின்றன என்று ரசிகர்களிடம் கருத்து எழுந்திருக்கிறது. முக்கியமாக 'Iam Waitingக்கு பதிலாக ஐ அம் கம்மிங் என்ற வசனம், 'காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேனு சொல்ற எவனா இருந்தாலும் சரி திரும்பி போற ஐடியாவே இல்லை என்ற வசனம்', 'மக்களுக்கு நல்லது பண்ண அரசியலுக்கு வாங்கடானா கொள்ளை அடிக்கிறதுக்கும், கொலை பண்றதுக்குமா அரசியலுக்கு வரீங்க' என்ற வசனம் எல்லாம் நேரடியாக திமுகவை அட்டாக் செய்துதான் எழுதப்பட்டிருக்கிறது என்று கமெண்ட்ஸ்கள் எல்லாம் பறந்துவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X