Jana Nayagan: ஜன நாயகன் டிரைலர் ரிலீஸ் தேதி உறுதி ஆயிடுச்சு.. ரசிகர்களே தயாரா இருங்க..
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்குரிய வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜனவரி 1, புத்தாண்டு பரிசாக வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சில பல காரணங்களால் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படவில்லை என்றும், எனவே படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவுற்று, படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல், மலேசியாவில் நடத்தப்பட்டதால், டிரைலர் வெளியீட்டு விழா என்று ஒரு நிகழ்ச்சி படக்குழு சார்பாக நடத்தப்பட்டு, படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்படுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியான நிகழ்ச்சியை நடத்த படக்குழு தரப்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனிருத்: இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஜனவரி 1ஆம் தேதியே படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் டிரைலருக்கான பின்னணி இசையை உருவாக்குவதில் இசையமைப்பாளர் அனிருத், கொஞ்சம் காலதாமதம் செய்ததால், 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியாவுக்கு சென்று வந்ததில் மூன்று நாட்கள் செலவிட்டதால், இந்த வேலைகள் கிடப்பில் இருந்துள்ளது.

டிரைலர்: இப்படி இருக்கையில் படத்தின் டிரைலரை வரும் 3ஆம் தேதி அதாவது நாளை மறுநாள், சனிக்கிழமை வெளியிட படக்குழு திட்டமிட்டு விட்டதாகவும், நாளை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜன நாயகன் படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரியின் தமிழ் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. டிரைலர் வெளியானால் ரசிகர்கள் அதை கொண்டாடி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சில திரையரங்க உரிமையாளர்கள் படத்தின் டிரைலரை திரையரங்கில் வெளியிட முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











