ஜன நாயகன் டிரைலர் ரிலீஸ் தேதி சொல்லிட்டாங்க.. தளபதி வெறியர்களே ரெடியா இருங்க.. முரட்டு சம்பவம் லோடிங்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்குரிய வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜனவரி 1, புத்தாண்டு பரிசாக வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜன நாயகன், விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவுற்று, படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வெளி நாடுகளிலும் படத்தின் சென்சார் வேலைகள் எல்லாம் முடிவுற்று படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து எல்லாம் புறப்பட்டு சென்றார்கள்.

Vijay Jana Nayagan Trailer Release on January 3rd Evening 6 45 Official Announcement

இதுதான் காரணமா?: இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஜனவரி 1ஆம் தேதியே படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் டிரைலருக்கான பின்னணி இசையை உருவாக்குவதில் இசையமைப்பாளர் அனிருத், கொஞ்சம் காலதாமதம் செய்ததாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருந்தார். அதனால் தான், இன்று அதாவது ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அனிருத் மலேசியாவுக்கு சென்று வந்ததில் மூன்று நாட்கள் செலவிட்டதால், இந்த வேலைகளில் தாமதம் ஆகியுள்ளது.


புத்தாண்டு ட்ரீட்: இப்படி இருக்கையில் படத்தின் டிரைலரை வரும் 3ஆம் தேதி அதாவது நாளை மறுநாள், சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், டிரைலர் ரிலீஸ்க்காக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர், தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான படமான தி கோட் படத்தின் டிரைலர் அறிவிப்புக்கு படக்குழு உருவாக்கிய போஸ்டரைப் போல உள்ளதாகவும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மொத்தத்தில் புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு ட்ரீட் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X