Vijay: ஜனநாயகன் படக் காட்சிகள் லீக்.. தளபதி கெட்டப் என்ன தெரியுமா?.. யார் பார்த்த வேலைடா இது?
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்த படம் விஜய்யின் கடைசி படம். விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதால், இந்த படம் அவரது கடைசி படம் ஆகும். இந்த படத்தை கே.வி. என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு விஜய் சுமார் ரூபாய் 225 கோடிகளில் இருந்து ரூபாய் 275 கோடிகள் வரை சம்பளமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், படத்தின் தாக்கம் தேர்தலிலும் இருக்கும் என விஜய் தரப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்கிடையில் கட்சிப் பணி, படப்பிடிப்பு பணிகள் என இரண்டையும் விஜய் மேனேஜ் செய்து வருகிறார். அண்மையில் கோவையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை இரண்டு நாட்கள் நடத்திவிட்டு, அடுத்த சில தினங்களில் கொடைக்கானலில் படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.
ஜனநாயகன் படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் மிகவும் தீவிரமாக படத்தை உருவாக்கி வருகிறார். படத்தை முதலில் லைட்டான பொலிட்டிகல் சப்ஜெக்ட்டாக மட்டும் தொடங்கிய அவருக்கு, சம காலத்தில் நடந்த சில சம்பவங்களையும் படத்தில் காட்சிகளாக சித்தரித்துள்ளார்களாம். படத்திற்கு அனிருத்தும் சில பாடல்களை தரமாக உருவாக்கி கொடுத்துள்ளாராம். அனைத்து பாடல்களுமே மிகவும் அரசியல் செறிவு கொண்ட பாடல்களாக உருவாகியுள்ளதாம்.

கதாநாயகிகள்: படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டேவுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு கதாநாயகியான மமிதா பைஜுவுக்கு அழுத்தம் திருத்தமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் மட்டும் தான் உள்ளது. இந்த பணிகளை விரைவில் முடித்துவிட்டு, அரசியலில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம் விஜய்..
லீக்கான காட்சிகள்: மேலும், வரும் ஜூன் மாதம் அவரது 51 வது பிறந்த நாளில் படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் லீக் ஆகியுள்ளது. அதில் விஜய் காவல்துறை சீருடையில் இருக்கிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் அதனை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலி: ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை கொடுத்தது. கூலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லீக் ஆனதும், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது என்றும் ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











