அப்பா விஜய் தயவு சுத்தமாக வேண்டாம்.. ஜேசன் சஞ்சய் ஃபுல் ஃபார்மில் இருக்காரு.. அடுத்த படம் இதுவா?

சென்னை: சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட விஜய்; ஒரு மகனுக்கும், மகளுக்கும் தந்தை ஆவார். விஜய் நடித்த போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் மகன் ஜேசன் சஞ்சய்யும், தெறி படத்தின் க்ளைமேக்ஸில் மகள் திவ்யா சாஷாவும் தோன்றியிருந்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் கேமரா முன்பு வருவதில்லை. லண்டனில் பள்ளி படிப்பை முடித்தார் சாஷா. மகன் ஜேசன் சஞ்சய்யோ சிக்மா என்ற படத்தை லைகா தயாரிப்பில் இயக்கியிருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரசிகையாக விஜய்க்கு அறிமுகமாகி பிறகு வாழ்க்கை துணையாக மாறினார் அவர். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஜேசன் சஞ்சய் அவரது சிறு வயதில் தந்தையின் படங்களில் தலை காண்பித்தார். திவ்யா சாஷாவும் தெறி படத்தின் க்ளைமேஸில் சில நிமிடங்கள் வந்து சென்றார். அதற்கு பிறகு அவர்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

Vijay Jason Sanjay Buzz Director Son Moves Ahead Without Father s Backing
Photo Credit:

சர்ப்ரைஸ் தந்தை ஜேசன்: எப்படியும் தனது தந்தை மாதிரியே நடிக்கத்தான் ஜேசன் வருவார் என்று எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அவரோ யாருமே எதிர்பார்க்காத வகையில் இயக்குநராகிவிட்டார். அது அனைவருக்குமே சர்ப்ரைஸாக இருந்தது. முதல் படமாக சிக்மாவை இயக்கிவருகிறார். அதில் சந்தீப் கிஷன், ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வங்கியில் நடக்கும் பண கொள்ளை தொடர்பாகத்தான் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார் என்பது டீசரை பார்க்கையில் தெரிந்தது.

விஜய் துணை இல்லை: ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார் என அறிவிப்பு வந்தபோது விஜய் என்ன வாழ்த்தப்போகிறார் என்ற ஆவல் இருந்தது. ஆனால் அவரோ ஒரு ட்வீட்டைக்கூட போடவில்லை. அதைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தார்கள். ஒருசிலரோ விஜய்க்கும், சஞ்சய்க்கும் பிரச்னை அதனால்தான் அவர் வாழ்த்தவில்லை என்றும் கூறினார்கள். அப்போதைக்கு அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனால் கடந்த பிப்ரவரி இறுதியில் சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு வெளியே தெரிந்த பிறகுதான் அத்தனை விஷயங்களும் புரிந்தன.

Also Read
விஜய்யை பார்த்ததும் விசித்திரம்.. காரில் நீச்சல் அடித்து முத்தம்.. தவெகவினரை கன்ட்ரோலே செய்ய முடியாதா?
விஜய்யை பார்த்ததும் விசித்திரம்.. காரில் நீச்சல் அடித்து முத்தம்.. தவெகவினரை கன்ட்ரோலே செய்ய முடியாதா?

ஒதுக்கிய ஜேசன்: இந்த விஷயத்தில் சங்கீதா அளவுக்கு ஜேசனும் விஜய் மீது கோபத்தில் இருக்கிறாராம். நடிகையுடன் பழகியதை இவர் தட்டி கேட்டதாகவும்; அந்த சமயத்தில் விஜய்க்கும் இவருக்கும் வாக்குவாதம் முற்றி; தள்ளுமுள்ளு வரைக்கும் சென்றுவிட்டது. இதன் காரணமாக தன்னுடைய பனையூர் வீட்டிலிருந்து ஜேசனை விஜய் வெளியே அனுப்பிவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. ஜேசனோ கூலாக தனது வேலைகளில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்தில்கூட தொழிலாளர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகின.

அடுத்த படம்: மேலும், சிக்மா படத்தில்கூட தனது பெயருக்கு முன்னால் இனிஷியலுக்கு அம்மா பெயரின் முதல் எழுத்தான Sதான் பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் விஜய் மீது ஜேசன் சஞ்சய்க்கு இருக்கும் வருத்தத்தின் அளவை புரிந்துகொள்ளலாம். இந்நிலையில் இப்போது கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் கண்ணன் ரவியை சமீபத்தில் சந்தித்தார் ஜேசன். அநேகமாக அவரது தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குவதற்கான முதல் படிதான் இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து படங்கள் இயக்கும் வாய்ப்பை தனியாகவே ஜேசன் பெற ஆரம்பித்துவிட்டதால்; இனிமேல் சுத்தமாக அவர் விஜய்யை கண்டுகொள்ளமாட்டாரோ என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X