Jayam Ravi: ”விஜய்யோட அரசியல் பயணம்.. கோயில்ல வச்சு இதெல்லாம்..” திருப்பதியில் எஸ்கேப்பான ஜெயம் ரவி

திருப்பதி: ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சைரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவி கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக திருப்பதிக்கு தனது மனைவியுடன் சென்ற ஜெயம் ரவி, சாமி தரிசனம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு ஜெயம் ரவி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

எஸ்கேப்பான ஜெயம் ரவி: தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் அதிக படங்களில் கமிட்டாகியுள்ள ஹீரோக்களில் ஜெயம் ரவி தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.

 Vijay: Jayam Ravi opens up about Vijays political entry

ஜெயம் ரவி நடிப்பில் இந்தாண்டு முதல் படமாக சைரன் வெளியாகிறது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த வாரம் 16ம் தேதி ரிலீஸாகிறது. ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சைரன் படத்தின் ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, அடுத்தடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது மனைவியுடன் திருப்பதி சென்றுள்ளார் ஜெயம் ரவி. திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சைரன் படம் குறித்து பேசிய அவர், தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்டையும் கூறினார்.

 Vijay: Jayam Ravi opens up about Vijays political entry

அப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை சக நடிகராக எப்படி பாக்குறீங்க என கேட்கப்பட்டது. இந்த கேள்வியை எதிர்பாராத ஜெயம் ரவி, "கோயிலில் வைத்து இதெல்லாம் வேண்டாம் என சொன்னதோடு... நான் நடித்த படங்களில் இருந்து எதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். அது இல்லாமல் இந்த மாதிரி கேள்வி வேண்டாம்.." என பதிலளித்தார். ஆனாலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து கேட்கப்பட்டது.

அதற்கு ஜெயம் ரவி எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், இனி அரசியல் மட்டும் தான் எனது வேட்கை எனக் கூறியிருந்தார். விஜய் அரசியலுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X