மீண்டும் அவர் இயக்கத்தில்... ஜூனியர் என்டிஆருடன் இணையும் விஜய்? றெக்கை கட்டி பறக்கும் தகவல்!

சென்னை: பிரபல இயக்குநருடன் , ஜூனியர் என்டிஆருடன் நடிகர் விஜய் இணைந்து நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் சினிமாவில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். சமீபத்தில்தான் அவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தப்படம் தகவல்

அடுத்தப்படம் தகவல்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஜூனியர் என்டிஆருடன்

ஜூனியர் என்டிஆருடன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தளபதி 65 படத்தில் மகேஷ் பாபு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நான்காவது படம்

நான்காவது படம்

இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் இதுவரை தெறி, மெர்சல், பிகில் ஆகிய ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள அட்லிக்கு இது நான்காவது படமாக அமையும்.

Recommended Video

VAATHI COMING Sets New Record | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Anirudh
2022ல் படப்பிடிப்பு

2022ல் படப்பிடிப்பு

மேலும் இந்தப் படம் தளபதி 67 படமாக இருக்கும் என்றும் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தளபதி 67 குறித்த தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X