ஒரே கதைக்கு நாலு இசையமைப்பாளர்கள்.. இளையராஜா படத்திற்கு மியூசிக் போட்ட ரகுமான்!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் விஜய். அவரது ஆரம்பகால சினிமாவில் காதல் படங்களில் நடித்து தனக்கான குடும்ப ஆடியன்ஸை கட்டமைத்த விஜய் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதும் விரும்பப்படும் நடிகராக மாறினார். அதன் பின்னர் அரசியல் கருத்துக்களை பேசக்கூடிய படங்களில் நடித்து தனது எதிர்கால அரசியலுக்கு அடித்தளத்தையும் அமைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

தனது ரசிகர்கள் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக மாற்றி தமிழக அரசியலில் களத்தில் குதித்துள்ளார். மேலும் தான் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன்பின்னர், முழுநேர அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய் தெரிவித்தது, திரையுலகில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தனது ஆரம்பகாலத்தில் நடித்து வந்த காதல் படங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த படங்களில் காதலுக்கு மரியாதை படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. தற்போது மலையாள சினிமாவிலும் தென்னிந்திய சினிமாக்களிலும் கலக்கி வரும் நடிகர் ஃபகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் இந்த படத்தினை 1997ஆம் ஆண்டு இயக்கினார். இதில் விஜய், ஷாலினி, சிவக்குமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், சார்லி, தாமு, ராதாரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இளையராஜா: இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளிவந்துள்ளது. அது தமிழ் சினிமாவில் கணிசமான படங்களே இசை அமைத்திருந்தாலும் தனது காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் மூலம் என்றும் நினைவு கூறப்படும் இசை அமைப்பாளராக இருப்பவர் இசையமைப்பாளர் சிற்பி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிற்பி பேட்டி: சிற்பி தமிழ் சினிமாவில் பல்வேறு மெகாஹிட் பாடங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக நாட்டாமை, குங்குமபொட்டு கவுண்டர், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, வருசமெல்லாம் வசந்தம் என பல மெகா ஹிட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசை அமைத்துள்ளார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

நான்கு இசையமைப்பாளர்கள்: அதில், " விஜய் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம் முதலில் மலையாளாத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படமாகும். மலையாளத்தில் இந்த படத்திற்கு அணியாதி பிரவு என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் மலையாளாத்தில் வெளியான படத்திற்கு அசேப்பச்சான் இசை அமைத்தார். தமிழில் இளையராஜா இசை அமைத்தார். தெலுங்கில் நீனு பிரேமிஸ்தானு என்ற பெயரில் வெளியான இந்த படத்திற்கு நான் (சிற்பி) இசை அமைத்தேன். இதே படத்தின் ஹிந்தி ரீ மேக்கிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்" எனக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.



Click it and Unblock the Notifications











