Vijay: ”இனி நோ சினிமா... ஐயோ!! விஜய் மாமா ஏன் இப்படி பண்றீங்க” ட்ரெண்டாகும் கேரள சிறுமியின் வீடியோ

சென்னை: விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ள விஜய், அதன்பின்னர் அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் விஜய்க்காக கேரளாவைச் சேர்ந்த சிறுமி செய்த அட்ராசிட்டி வைரலாகி வருகிறது.

விஜய் மாமா ஏன் இப்படி பண்ணீங்க: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவிருப்பதாக அறிவித்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். அதேபோல் அவரது ரசிகர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவும் செய்தனர்.

 Vijay: Kerala girl crying video trending for Vijay out of from cinema

இதனால் உற்சாகமான விஜய் கடந்தாண்டு முதலிடம் பிடித்த பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசும் நிதி உதவியும் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக சில மாதங்களாக தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்த விஜய், தற்போது கட்சியின் பெயரையும் அறிவித்துவிட்டார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய், 2026 தேர்தலிலும் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

முக்கியமாக அரசியல் பயணத்துக்காக இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். இது விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஏமாற்றத்தை கொடுத்தது.அரசியல் ஒருபக்கம் இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என பலரும் கருத்துத் தெரிவித்தனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது விஜய் இப்படியொரு முடிவு எடுக்கலாமா என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

விஜய் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் ஒரு கமர்சியல் ஹீரோ என்பதால் அவருக்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் உள்ளனர். பொதுவாகவே விஜய்யின் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்பதை கேள்விப்பட்ட குழந்தைகள், கதறி அழுத வீடியோக்கள் வைரலாகி வந்தன.

அந்த வரிசையில் விஜய்க்காக கேரளாவைச் சேர்ந்த சிறுமி தேம்பி தேம்பி அழுதது டிவிட்டரில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்கே இவரது படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் மாமா இனி படங்களில் நடிக்க மாட்டாராம் என சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். அதனைக் கேட்ட அச்சிறுமி பேச வார்த்தைகள் இல்லாமல் தேம்பி தேம்பி அழுகிறார்.

விஜய் மாமா ஏன் இப்படி பண்ணீங்க என கேட்பதை போன்ற முக பாவனையுடன் அச்சிறுமி அழுகிறார். சிறுமியின் பரிதவிப்பு க்யூட்டாக இருந்தாலும் விஜய்க்கு மொழிகளை கடந்து குழந்தைகள் கூட ரசிகர்களாக இருக்கிறார்களே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கோட் உட்பட இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன்படி விஜய்யின் தளபதி 69 இயக்குநர் யார் என்பதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேஸில் வெற்றிமாறன் தான் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X