TVK Vijay: விஜய்க்காக காத்திருந்த மாற்றுத் திறனாளி சிறுவன்.. ஆரத் தழுவி முத்தமிட்ட TVK விஜய்
கன்னியாகுமரி: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏப்ரல் 12-ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெற்றாலும் இவரை காண அவரது ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விடுகிறார்கள். இந்நிலையில் கன்னியாகுமரியிலும் அவரைக் காண ரசிகர்கள் திரண்டு விட்டார்கள்.
இப்படி இருக்கையில் விஜய் பார்ப்பதற்காக மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருந்தார். விஜய் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டிய இடத்திற்கு வந்து சேர்வதற்கு முன்னதாகவே சிறுவன் விஜய்க்காக காத்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
இந்நிலையில் சிறுவன் அமர்ந்திருந்ததற்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்ற விஜய் டக்கென்று தனது சைக்கிளை நிறுத்தி சிறுவனிடம் சென்று அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் நெற்றியில் முத்தம் வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் அந்த சிறுவன் பல மணி நேரங்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

தவெக: 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் போட்டிருக்கிறது. எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் வேட்பு மனுவை திருத்தம் செய்து தரச் சொல்லி தேர்தல் அலுவலர் கூறியும் வேட்பு மனுவை திருத்தம் செய்து தர வேட்பாளரும் மாற்று வேட்பாளரும் அங்கு இல்லை. இதனால் வேட்பு மனுவை திருத்தி தருவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் மட்டும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இரண்டு தொகுதிகளில் விஜய்: நடிகர் விஜய்யை பொறுத்த வரையில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் 233 தொகுதிகளிலும் அவரது கட்சி விசில் சின்னத்தில் போட்டியிடுகிறது முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் விஜய்யும் அவரது கட்சியினரும் இந்த தேர்தலை எதிர் கொண்டு வருகிறார்கள்.

எத்தனை நாட்கள்: விஜய் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் விஜய் பிரசாரம் செய்கிறார். வரும் 21ஆம் தேதி வரைதான் பிரசாரம் செய்ய முடியும் என்பதால் விஜய் என்னும் பிரசாரத்திற்காக பல மாவட்டங்களுக்கு செல்லாமல் உள்ளார். இதனால் மீதமுள்ள நாட்களுக்குள் விஜய் எத்தனை நாட்களுக்கு பிரசாரம் செய்வார்? எத்தனை மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்வார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நெட்டிசன்கள் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்களை நோக்கி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











