கருப்பு பணத்தை வெள்ளை பணமா மாற்றுகிறேனா? வருத்தப்பட்டு பேசிய KPY பாலா!
சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிஒய் பாலா, மூன்று வேளை சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தேன். இப்போ சம்பாதிக்கிறேன். இதனால், என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன், யாருடைய கருப்பு பணத்தையும் நான் வெள்ளையாக மாற்றவில்லை என்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு'என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அதன் பின்னர் 'குக் வித் கோமாளிஉட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும், தான் சம்பாதிக்கும் சொற்ப சம்பளத்தில் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்று அழைத்து வருகின்றனர்.

என் பின்னால் இருப்பது: இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கேபிஒய் பாலா கலந்து கொண்டார். அப்போது, நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து பல நடிகர்களின் குரலில் பேசியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, என்னால முடிவதை சம்பாதித்து மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். ஆனால் பலர் என் பின்னாடி யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லிகிறார்கள். என் பின் கஷ்டங்கள், வலி, வேதனைகள் தான் இருக்கிறது. அதைத் தாண்ட என்கூட இருப்பவர் லாரன்ஸ் அண்ணா தான், அவருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
கருப்பு பணமா: அண்மையில் ஒரு வீடியோவில் யாருடைய கருப்பு பணத்தையோ வெள்ளை பணமாக மாற்றுகிறார் என்று சொல்லி இருந்தார்கள். நான் கருப்பு பணத்தை மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தைத் தான் மற்றவர்களுக்கு, என்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். நான் மூன்று வேளை சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தேன். இப்போ சம்பாதிக்கிறேன். இதனால், என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











