ரஜினிகாந்தை சந்தித்த விஜய் குமார்.. கூலி ஷூட்டிங்கில் கிடைத்த ஆசிர்வாதம்.. ரத்னா மிஸ் பண்ணிட்டாரே!

சென்னை: உறியடி படத்தை இயக்கி நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய விஜய் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றேன் என சற்றுமுன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் மே மாத ரிலீஸை குறிவைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ரஜினிகாந்தின் கூலி படம் தான் இருக்கப் போகிறது என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அந்த படத்தின் வசூலை வேற எந்தவொரு படமும் இந்த ஆண்டு முறியடிக்காது என்கின்றனர்.

Rajinikanth Vijay Kumar Coolie

விஜய்யின் ஜன நாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வரும் என்கின்றனர். அஜித் குமாரின் குட் பேட் அக்லி, கமல்ஹாசனின் தக் லைஃப், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் அதன் பின்னர் நல்ல கலெக்‌ஷனை அள்ளும் படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்நாளில் மறக்கவேமாட்டேன்: கூலி படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். இது என் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமான தருணமாக இருக்கும். எல்லாத்துக்கும் லோகேஷ் கனகராஜுக்கு தான் நன்றி சொல்லணும் என உறியடி விஜய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்: உறியடி படத்தை இயக்கி நடித்து ஹிட் கொடுத்த விஜய் குமார் உறியடி 2 படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் வாங்கி வெளியிட்டது. ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து திரைக்கதை ஆசிரியராக இவரும் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்துடன் போட்டோ எடுத்திருக்கிறார்.

ரத்னகுமார் மிஸ் பண்ணிட்டார்: விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ரத்னகுமார் பணியாற்றி இருந்தார். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பருந்து எவ்வளவு தான் உயர பறந்தாலும் பசி வந்தால் இறங்கி கீழேதான் வரணும்னு பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே கூலி படத்தில் அவர் பணியாற்றவில்லை என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் பணியாற்றி இருந்தால், அவரும் ரஜினிகாந்த் உடன் இப்படியொரு சந்திப்பை நிகழ்த்தியிருப்பார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X