காலா பாணி காவி வேட்டி.. கருவாட்டு சந்தையில் அரிவாளுடன் விஜய்.. பிகில் பர்ஸ்ட் லுக் பின்னணி என்ன?

Recommended Video

Bigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக்கில், காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் விஜய் அமர்ந்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு பிகில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

Vijay latest fim Bigil first look remembers Rajinikanth

நாளை விஜய் பிறந்தநாள் என்பதால், அதையொட்டி, இன்று, திரைப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ளது படக்குழு. நாளை மாலை 2வது லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாம்.

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு, 3வது முறையாக அட்லி-விஜய் கூட்டணி சேர்ந்த படம் இது. எனவே பர்ஸ்ட் லுக் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போலவே, 2 கெட்அப்புகளில், விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரர் போல ஜெர்சி அணிந்து நின்றபடி உள்ளார். மற்றொரு விஜய் நடுத்தர வயதுள்ளவர் போல காட்சியளிக்கிறார். அவர் உட்கார்ந்த நிலையில் உள்ளார்.

சுற்றியுள்ள இடத்தை பார்க்கும்போது அது மீன் மார்க்கெட் என்பது தெரிகிறது. கருவாடு, மீன் போன்றவை விற்பனைக்கு உள்ளன. உட்கார்ந்திருக்கும் விஜய் காவி வேட்டி கட்டியுள்ளார். அவர் முன்பாக, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் ஒரு மரத்துண்டு உள்ளது. அதன் மீது அரிவாள் ஒன்று வெட்டி வைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

படத்தில் விஜய் இரு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். ஒரு கதாப்பாத்திரம் கால்பந்து பயிற்சியாளராம். கால்பந்து வீராங்கனையாக நாயகி நயன்தாரா நடிக்கிறார். காவி வேட்டி கட்டியுள்ள விஜய், அந்த பகுதி தாதாவாக இருக்க கூடும் என்கிறார்கள். வட சென்னை வாழ்க்கை முறையை வைத்து, மற்றொரு மெட்ராஸ் படம் போல இது உருவாகுவது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தால் தெளிவாக தெரிகிறது.

இதில் இன்னொரு விஷயம். ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான, மும்பை தாதா கதையான காலா பர்ஸ்ட் லுக்கில், ஜீப் மீது ரஜினிகாந்த் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பார். அதிலும் அவர் காவி வேட்டி கட்டியிருப்பார். பிகில் பர்ஸ்ட் லுக்கும் அதே போன்ற காவி வேட்டி, தாதா பின்னணியோடு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X