twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போர்ப்ஸ் இந்திய பிரபலங்கள் பட்டியலில் விஜய்க்கு 28, அஜீத்துக்கு 61வது இடம்

    By Siva
    |

    சென்னை: போர்ப்ஸ பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61 மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது.

    போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஷாருக்கின் பரம எதிரி சல்மான் கான்.

    போர்ப்ஸ் பட்டியலில் நம்ம கோலிவுட் பிரபலங்களும் உள்ளனர்.

    விஜய்க்கு 28வது இடம்

    விஜய்க்கு 28வது இடம்

    'இளைய தளபதி' விஜய் போர்ப்ஸ் இந்திய பிரபலகள் பட்டியலில் 28வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ. 38.46 கோடி சம்பாதித்துள்ளார்.

    43வது இடத்தில் சூர்யா

    43வது இடத்தில் சூர்யா

    படங்கள் தவிர்த்து விளம்பரப் படங்களில் அதிகம் சம்பாதிக்கும் சூர்யாவுக்கு போர்ப்ஸ் பட்டியலில் 43வது இடம் கிடைத்துள்ளது.

    61வது இடத்தில் 'தல'

    61வது இடத்தில் 'தல'

    8 மாதத்திற்கு ஒரு படம் என்று கணக்கு வைத்து நடித்து வரும் அஜீத் குமாருக்கு இந்திய பிரபலங்கள் பட்டியலில் 61வது இடம் கிடைத்துள்ளது.

    விக்ரமுக்கு 67வது இடம்

    விக்ரமுக்கு 67வது இடம்

    படத்துக்கு ஏற்றவாறு தன்னையே மாற்றிக் கொள்ளும் விக்ரம் போர்ப்ஸ் பட்டியலில் 67வது இடத்தில் உள்ளார்.

    English summary
    While Bollywood star Shah Rukh Khan topped the Forbes India Celebrity 100 list, Vijay secured the 28th place. Ajith Kumar is in 61st place while Suriya and Vikram are in 43 and 67th places respectively.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X