பட்டையை கிளப்பாக தயராகும் தளபதி 66... ஹைதராபாத் பறந்த விஜய்!

சென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படம் குறித்த சூப்பர் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெயரிடப்படாத இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என தலைப்பு வைக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் சில பாடல்கள் ஏற்கனவே கம்போஸ் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட்

பீஸ்ட்

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மாஸ் காட்டிய படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் நடித்திருந்தார். இதில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன் விடிவி கணேஷ் யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மொத்த வசூல்

மொத்த வசூல்

பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் என்னும் பெயரைப் பெற்று பீஸ்ட் நல்ல பாக்ஸ் ஆபீஸ் ரேட்டிங்கை பெற்றது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240 கோடியை தாண்டியுள்ளது.

தளபதி 66

தளபதி 66

இதையடுத்து விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்துள்ளார். தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக தெலுங்கு நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் முன்னதாக சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகாக இப்படத்தில் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

குடும்ப சென்டிமென்ட்

குடும்ப சென்டிமென்ட்

தளபதி 66 படத்தில் சரத்குமார், ஷாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், காதல்,காமெடி என அனைத்தும் கொண்ட படமாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப் படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத் பறந்த விஜய்

ஹைதராபாத் பறந்த விஜய்

கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கி 2 கட்டங்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் நாளை ஐதராபாத்தில் 3ம் கட்டமாக ஷூட்டிங் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார். ஹைதராபாத் விமானநிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X