எங்கள் நெஞ்சின் அதிபதி.. மாற்றுத் திறனாளி ரசிகரை கைகளில் ஏந்திய விஜய்.. உருகும் ரசிகர்கள்!

சென்னை: தீ தளபதி என்றும் எங்கள் நெஞ்சின் அதிபதி என்றும் நாங்க ஒண்ணும் சும்மா சொல்லல.. நீங்களே இந்த போட்டோக்களை பாருங்க என புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

VMI என விஜய் மக்கள் இயக்கமாக இருந்தது தற்போது TVMI எனும் தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

மாற்றுத்திறனாளி ரசிகருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'அந்த மனசு தான் சார் கடவுள்' என டிரெண்டிங்கை திணற விட்டு வருகின்றனர்.

பிரியாணியை ருசிபார்த்த விஜய்

பிரியாணியை ருசிபார்த்த விஜய்

பனையூரில் நடிகர் விஜய்யின் வீடு மற்றும் விஜய் மக்கள் மன்ற அலுவலகம் உள்ளது. கடந்த மாதம் மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து பிரியாணி விருந்து போட்ட நடிகர் விஜய் இன்று மீண்டும் சில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்துள்ளார். அதற்காக ரெடியான பிரியாணியை விஜய்யே ருசி பார்த்து ரசிகர்களுக்கு பரிமாறி உள்ளார்.

ரசிகர்களுடன் போட்டோ

ரசிகர்களுடன் போட்டோ

கடந்த முறை ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளாத நிலையில், இந்த முறை பனையூருக்கு படையெடுத்து வந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய் போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் ஷேர் செய்துள்ள புகைப்படம் விஜய் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

மாற்றுத்திறனாளியை தூக்கி

மாற்றுத்திறனாளியை தூக்கி

மாற்றுத்திறனாளி ஒருவர் நடிகர் விஜய்யை சந்திக்க நெடு நேரம் காத்திருந்ததை அறிந்த நடிகர் விஜய் அவரை தூக்கி தனது கைகளில் ஏந்தியபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி விஜய் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. 'எங்கள் நெஞ்சின் அதிபதி' என்றும் 'அந்த மனசு தான் சார் கடவுள்' என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லைஃப் டைம் செட்டில்மென்ட்

லைஃப் டைம் செட்டில்மென்ட்

கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் என்றும் உனக்கு ரசிகரா இருப்பதே மகிழ்ச்சி தளபதி என்றும் ரசிகர்கள் இந்த போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக காத்திருக்கிறது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாரிசு ரிலீசுக்குப் பின்னர் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X