அங்கிளுக்கு உம்மா கொடும்மா.. குழந்தையை தூக்கிய விஜய்.. கன்னத்தில் விழுந்த க்யூட்டான முத்தம்!
திருவனந்தபுரம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.
ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நேற்று மலையாளத்தில் பேசி அசத்திய நடிகர் விஜய் ரசிகனின் குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சிய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

மீசையில்லா குழந்தையப்பா: படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நான் மீசை வச்ச குழந்தையப்பா எனப் பாடி இருப்பார். மீசை வைக்காத குழந்தையாகவே நடிகர் விஜய் கோட் படத்திற்காக மாறி உள்ள நிலையில், குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகின்றன.
அங்கிளுக்கு உம்மா கொடுங்க: நடிகர் விஜய் கேரளாவில் குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு கொஞ்சிய போது குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா கொடு" என பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் தரும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கொடுத்த வச்ச குழந்தை என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் ஹீரோ: தளபதி விஜய் தான் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களின் ஹீரோ என்றும் ரசிகர்களுடன் எப்படி நெருக்கமாக பழகி வருகிறார் பாருங்கள் என்றும் அந்த வீடியோவையும் குழந்தையுடன் விஜய் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

களைகட்டும் கேரளா: நடிகர் விஜய் நடித்த வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறும் வரை கேரளாவை களைக்கட்டும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேரள நடிகர்களுக்கு நிச்சயம் விஜய் மீது பொறாமை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். சினிமா ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் நடிகர் விஜயை காண திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி விஜய் சந்திப்பு: வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று கேரளா செல்ல உள்ள நிலையில், கேரளாவில் படப்பிடிப்பை நடத்தி வரும் நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பாபா படத்தின் படப்பிடிப்பு மற்றும் பகவதி படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த போது ரஜினிகாந்தின் நடிகர் விஜய் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











