RB சௌத்ரிக்கு விஜய் நேரில் அஞ்சலி செலுத்த திட்டம்? முதல் வெற்றியைக் கொடுத்தவருக்கு கடைசி மரியாதை

சென்னை: தென்னிந்திய திரையுலகின் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் (Super Good Films) ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 'வெற்றி ஃபார்முலா' தெரிந்த தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்.பி. சௌத்ரி. அவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது தனது 100-வது பிரமாண்ட திரைப்படத்தை தயாரித்து வந்தது. அந்தப் படத்தின் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாகவும், மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பங்களின் ஃபேவரைட் தயாரிப்பாளர்: "சூப்பர் குட் ஃபிலிம்ஸ்" என்றாலே அது குடும்பங்கள் கொண்டாடும் 'பீல் குட்' (Feel Good) படங்களாகத்தான் இருக்கும் என்ற நற்பெயரை திரையுலகில் உருவாக்கி வைத்திருந்தார் சௌத்ரி. சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஆனந்தம் எனத் தமிழ் சினிமாவின் பல காலத்தால் அழியாத எவர் க்ரீன் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

Vijay Likely to Pay Last Respects to R B Choudary Tribute Planned for Producer Who Gave His First Big Hit

விஜய்யின் முதல் ஹிட்: ஆனால் அவரது இந்த அகால மரணம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நடிகர் விஜய்க்கு திரை வாழ்க்கையில் மிகப்பெரிய முதல் வெற்றிப் படமாக அமைந்தது, 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் தான். அந்த படத்திற்குப் பிறகு, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் என விஜய்க்கு தொடர்ந்து எவர் க்ரீன் படங்களைக் கொடுத்து, அவரது திரை வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர்.

Vijay Likely to Pay Last Respects to R B Choudary Tribute Planned for Producer Who Gave His First Big Hit

விஜய் அஞ்சலி செலுத்த திட்டம்?: இந்நிலையில் இவரது மறைவுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மயிலாப்பூரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதே நேரத்தில் விஜய் தற்போது தனது தலைமையிலான அரசை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், முதலமைச்சராக பொறுப்பேற்று, சில வாரங்களுக்கு பின்னர், ஆர்.பி. சௌத்ரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X