விஜய்க்கு பிடித்த கேரக்டர்.. அவருக்கு இந்த கேரக்டரில் நடிக்கதான் ஆசை.. வெளிப்படுத்திய லோகேஷ்!

சென்னை : பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு இரட்டை வேடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக பூர்த்தி செய்யவில்லை என்ற போதிலும் அவர்கள் இந்தப் படத்திற்கான கௌரவத்தை கொடுக்கவே செய்தனர். படம் திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடி ரூ.227 கோடி கலெக்ஷனை எட்டியது. தொடர்ந்து ஓடி வருகிறது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு அடுத்ததாக டயலாக் போர்ஷனை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

இந்தப் படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளார். மேலும் படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பான வகையில் படத்தை உருவாக்கி வருகிறார் வம்சி படிப்பள்ளி. படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாளில் அறிவிப்பு

விஜய் பிறந்தநாளில் அறிவிப்பு

இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

முன்னதாக இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில், விஜய்யை வித்தியாசமாக காட்ட லோகேஷ் முயற்சித்திருந்தார். ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் அடுத்ததாக உருவாகவுள்ள தளபதி 67 படம் கண்டிப்பாக தனது 100 சதவிகித படமாக அமையும் என்று முன்னதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் சூட்டிங் துவக்கம்

அக்டோபரில் சூட்டிங் துவக்கம்

இதனிடையே இந்த படத்தின் சூட்டிங் வரும் அக்டோபரில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்க்கு பிடித்த கேரக்டர் குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லனாக நடிக்க விஜய்க்கு பிடிக்கும்

வில்லனாக நடிக்க விஜய்க்கு பிடிக்கும்

விஜய் எப்போதுமே வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் காட்டுவார் என்றும் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பதும் அவருக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல அவருக்கு வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.

Recommended Video

ரசிகர்களுடன் Cake வெட்டி கொண்டாடிய ArunVijay மற்றும் Hari #Kollywood |Filmibeat Tamil
கேங்ஸ்டர் கதை ரெடி

கேங்ஸ்டர் கதை ரெடி

இதேபோல மற்றொரு பேட்டியில் தான் முழுநீள கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். அந்த படத்தின் லீட் கேரக்டர் குறித்தும் அவர் பேசியிருந்தார். இந்நிலையில் இந்த கேங்ஸ்டர் கதையில்தான் விஜய் நடிக்கவுள்ளாரா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X