Vijay: விக்ரம் 2, கைதி 2 படங்களில் விஜய்... உஷாரான லோகேஷ் கனகராஜ்... அப்பவே அப்படியொரு பிளான்!
சென்னை: விஜய்யின் அரசியல் பயணம் விரைவில் தொடங்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் முடிவு ஏற்கனவே லோகேஷுக்கு தெரியும் என சொல்லப்படுகிறது.
விஜய்யின் முடிவால் உஷாரான லோகேஷ்
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். மேலும் இனி முழுமையாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். விஜய்யின் இந்த முடிவால் தமிழில் பல முன்னணி இயக்குநர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய்க்காக அட்லீ, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குநர்கள் கதை ரெடி செய்து வைத்திருந்தும் இயக்க முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தளபதி 69-ல் மட்டும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஹெச் வினோத் இயக்கலாம் எனத் தெரிகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் லியோ வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மேலும் இது லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியிருந்தது.
இதனால் விரைவில் லியோ இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல், லோகேஷின் LCU ஜானரில் உருவாகும் படங்களிலும் விஜய் கேமியோ ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யின் லியோவில் கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது LCU ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லை என இப்போது வெளியான தகவல்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதாவது தலைவர் 171 முடிந்ததும் விக்ரம் 2, கைதி 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் லோகேஷ். இந்தப் படங்களில் விஜய் நடிக்க வேண்டிய கேமியோ ரோல் காட்சிகளை லோகேஷ் ஏற்கனவே ஷூட் செய்துவிட்டாராம். அதாவது லியோ படப்பிடிப்பின் போதே விஜய்யை வைத்து சில காட்சிகளை ஷூட் செய்த லோகேஷ், அதனை விக்ரம், கைதி படங்களின் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த பிளான் செய்துவிட்டாராம்.
இதனால் விஜய் சினிமாவில் இருந்து விலகினாலும் விக்ரம் 2, கைதி 2 படங்களில் அவரது கேமியோ பெர்பாமன்ஸ் கலக்கலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காட்சிகளுக்கு விஜய் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











