Leo: லியோ படத்தின் முதல் 10 நிமிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்கன்னு லோகேஷ் சொன்னதுக்கு இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் நிலையில் படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் செய்து விடாதீர்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த லியோ படத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மரணமாஸாக வெயிட் செய்து வருகின்றனர். படத்தின் டிக்கெட் விற்பனை சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன்களிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த லியோ படத்தின் சுவாரஸ்யங்களை தனது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். அவரது பேட்டிகள் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன. படத்தின் பல ஹேஷ்டேக்குகளும் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன. படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்குகள் விற்பனை ஒருபுறம் மாஸ் காட்டி வந்தாலும், திரையரங்குகளிலும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டியொன்றில் படத்தின் முதல் 10 நிமிடங்களை ரசிகர்கள் மிஸ் செய்ய வேண்டாம் என்றும் முன்னதாகவே திரையரங்குகளுக்கு சென்று முதல் 10 நிமிட காட்சிகளை பார்க்கவும் வலியுறுத்தியிருந்தார். அவரது இந்த பேட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை உண்டு செய்துள்ளது. இதேபோல கடைசி 40 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிகளையும் மிஸ் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே லியோ படம் LCUவில் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. லோகேஷின் அடுத்தடுத்த பேட்டிகளில் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர் நேரடியான பதிலை கொடுக்கவில்லை. இன்னும் சில தினங்களில் படம் ரிலசாகவுள்ள நிலையில், இதுகுறித்து படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் LCU குறித்த ரசிகர்களின் கேள்விக்கு வரும் 19ம் தேதிதான் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, படம் குறித்த பல்வேறு விஷயங்களை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் செய்ய வேண்டாம் என லோகேஷ் கூறியதற்கான காரணத்தை ரசிகர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். LCU title card லியோ படத்தில் இடம்பெறவுள்ளதால்தான் லோகேஷ் இவ்வாறு கூறியுள்ளதாக கூறியுள்ள அவர், லோகேஷின் முந்தைய படங்களை இணைத்து LCU கனெக்ஷனையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ மூலம் அந்த ரசிகர் கூறியுள்ளது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதுகுறித்து தெரியவில்லை. ஆனால் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் படங்களின் சிறப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தையும் உண்டு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











