Vijay: "விஜய்யுடன் மீண்டும் இணைந்தால்... லியோ 2 கிடையாது..” லோகேஷின் வேறலெவல் பிளான்!!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த லியோ 19ம் தேதி ரிலீஸாகிறது.

முன்னதாக இந்தக் கூட்டணியில் வெளியான மாஸ்டர், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அதேபோல், லியோ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Vijay: Lokesh Kanagaraj opens up about his upcoming film with Vijay again

இந்நிலையில், விஜய்யுடன் மீண்டும் இணைவது பற்றி லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.

மீண்டும் இணைகிறதா விஜய் - லோகேஷ் கூட்டணி?
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியுடன் கைதியில் இணைந்தார். இந்த இரண்டு படங்களுமே லோகேஷுக்கு நல்ல ஓபனிங் கொடுத்திருந்தது. ஆனால், மூன்றாவது விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

அதன்பின்னர் லோகேஷ் இயக்கிய விக்ரம், கோலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அட்டகாசமான ஆக்‌ஷன் ஜானரில் மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான விக்ரம், வெறித்தனமாக ஹிட் அடித்தது. இதனால் தற்போது அவர் இயக்கியுள்ள லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறியுள்ளது. முக்கியமாக இதில் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ்.

விஜய்யின் ஃபேவரைட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் டாப் பொஷிஷனில் இருக்கும் லோகேஷ், இதற்காகவே லியோ படத்தை தரமாக செதுக்கியுள்ளாராம். விஜய் - லோகேஷ் கூட்டணி ரசிகர்களிடமும் அதிக ஹைப் கொடுத்துள்ளது. மேலும், இந்தப் படம் கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 Vijay: Lokesh Kanagaraj opens up about his upcoming film with Vijay again

லோகேஷ் கனகராஜ்ஜும் விஜய்யுடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஏற்கனவே லியோ 2வது பாகம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்படும் நிலையில், விஜய்யுடன் மீண்டும் இணைவது பற்றி லோகேஷ் மனம் திறந்துள்ளார். அதாவது விஜய்ண்ணாவுடன் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளார்.

அப்படி விஜய் நடிப்பில் மூன்றாவதாக ஒரு படம் இயக்கினால், அது ஆக்‌ஷன் ஜானரில் இருக்காது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் விஜய்ண்ணாவின் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன் என லோகேஷ் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்தாலும், அதில் ஆக்‌ஷன் பெரியளவில் இருக்காது என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X