என்ன லோகேஷ் கனகராஜ் மாதிரி மாறிட்டாரே விஜய்.. தளபதி 67 லுக் இதுதானா.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: வாரிசு படத்திற்காக க்யூட்டான ஹேர்ஸ்டைல் உடன் சாக்லெட் பாய் லுக்கிற்கு மாறிய விஜய், தளபதி 67 படத்திற்காக டெரர் லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

அஜித், விஜய் என இருவரும் மாறி மாறி வெள்ளை சட்டை அணிந்து போட்டோக்களை போட்டு வருவதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 அறிமுக நிகழ்ச்சியில் தளபதி 67 படத்தின் அப்டேட் வருமா? என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வாரிசை மறந்த ரசிகர்கள்

வாரிசை மறந்த ரசிகர்கள்

விஜய்யின் பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், விஜய்யின் அடுத்த படமான வாரிசு படமாவது மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கே இயக்குநர் வம்சி மீது பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை என்பது தெரிகிறது. எல்லா காட்சிகளும் ஏற்கனவே லீக் ஆகி உள்ள நிலையில், தெலுங்கு படமாகவே வாரிசு வரும் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கே எழுந்து விட்டது.

வெறித்தன வெயிட்டிங்

வெறித்தன வெயிட்டிங்

ஆனால், அதே நேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 67 படத்துக்காக இப்பவே ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தளபதி 67 படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் கமல் முன்னிலையில், வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால், தீபாவளிக்குத் தான் அதிகபட்சமாக அந்த அப்டேட் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

தளபதி 67 லுக்

தளபதி 67 லுக்

வாரிசு திரைப்படம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க ரெடியாகி விட்டார் என கூறுகின்றனர். வெள்ளை சட்டையில் வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ள விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் மாதிரி இருக்காரே

லோகேஷ் மாதிரி இருக்காரே

தளபதி 67ல் கேங்ஸ்டராக நடிக்க புதிய ஹேர்ஸ்டைல் லுக்கிற்கு மாறி உள்ளார் விஜய் என்றும், பார்க்க அப்படியே லோகேஷ் கனகராஜ் மாதிரி இருக்காரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இன்னொரு சம்பவத்தை லோகேஷ் செய்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

சூர்யா, பிருத்விராஜ்

சூர்யா, பிருத்விராஜ்

பகத் ஃபாசிலை தொடர்ந்து மலையாள நடிகர் பிருத்விராஜும் லோகேஷ் யூனிவர்ஸில் இணையப் போகிறார் என கூறுகின்றனர். கெளதம் மேனன், சஞ்சய் தத், பிருத்விராஜ் உடன் இணைந்து ரோலக்ஸ் சூர்யாவும் தளபதி 67ல் இணைந்தால் தியேட்டர் தெறிக்கும், பாக்ஸ் ஆபிஸ் மிரட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். லோகேஷ் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X