ஜில்லா ஷுட்டிங் ஸ்பாட் சேட்டை.. காஜலுக்கு டச்சப் பாயாக மாறிய நடிகர் விஜய்.. வைரலாகும் க்யூட் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் நடிகை காஜல் அகர்வாலுக்கு டச்சப் பாயாக மாறி கேலி செய்த க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List

படத்தையும் தாண்டி படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்கள் எப்போதும் சுவாரசியமாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.

அதற்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகள் தாங்களாக இருக்கும் நேரத்தில் பதிவு செய்யப்படும் சில காட்சிகளும் போட்டோக்களும் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

மாஸ்டரில் ப்ளூப்பர்ஸ்

மாஸ்டரில் ப்ளூப்பர்ஸ்

பல படங்களில் மேக்கிங் வீடியோக்கள் ப்ளூப்பர்ஸ் என படத்தின் இறுதியில் சேர்க்கப்படும். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அரங்கேறும் பல சுவாரசிய நிகழ்வுகள் இருக்கும். அண்மையில் விஜயின் மாஸ்டர் படத்தில் கூட ப்ளுப்பர்ஸ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

விஜய் கிண்டல்

விஜய் கிண்டல்

இந்நிலையில் விஜய் ஷுட்டிங்கின் போது கேலி கிண்டலில் ஈடுபட்ட மற்றொரு சுவாரசிய வீடியோ சமூக வலைதளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதாவது, விஜயின் ஜில்லா பட ஷுட்டிங்கின் போது, எப்போ மாமா ட்ரீட் என்ற பாடல் காட்சியாக்கப்படுகிறது.

டச்சப் பாயாக

டச்சப் பாயாக

அதில் நடிகை காஜல் அகர்வால் குரூப் டான்சர்களுடன் இணைந்து நடனமாடிக் கொண்டிருக்கிறார். அப்போது டச்சப் பாய் போல கையில் கண்ணாடியுடன் உள்ளே நுழையும் விஜய் அவரை டச்சப் செய்து கொள்ளும்படி கூறி கிண்டலடிக்கிறார்.

டான்ஸை கேலி செய்து

டான்ஸை கேலி செய்து

இதனை பார்த்து செல்லமாக கோபப்படுகிறார் காஜல் அகர்வால். பின்னர் அவருடைய டான்ஸ் ஸ்டெப்பை கேலி செய்வது போல சேர்ந்து ஆட்டம் போடுகிறார் விஜய். இந்த வீடியோவை விஜயின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

விஜய் சேட்டை

விஜய் சேட்டை

அதனை விஜய் ரசிகர்கள் பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளனர். அந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. எப்போதும் அமைதியாகவே இருக்கும் விஜய், நிகழ்ச்சிகளில் கூட அளந்தளந்து பேசும் விஜய் இப்படி ஷுட்டிங் ஸ்பாட்டில் செய்திருக்கும் சேட்டை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X