ஸ்னேகா, பியாவை துள்ளிக் குதிக்க வைத்த விஜய்
சென்னை: நடிகர் விஜய் சொன்ன வார்த்தையைக் கேட்டு விட்டு இயக்குனர் சினேகா பிரிட்டோ மற்றும் நடிகை பியா பாஜ்பாய் குஷியாகி குதித்தனராம்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படமான சட்டம் ஒரு இருட்டறையை அவரது பேத்தி சினேகா பிரிட்டோ ரீமேக் செய்துள்ளார். சினேகாவின் தாயார் விமலா ராணி தான் படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பாளர். தமன், ரீமாசென், பிந்து மாதவி, பியா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தைப் பார்த்த விஜய்
சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கை விஜய் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்த அவர் அடடா சினேகா என்ன அருமையாக படத்தை எடுத்துள்ளார் என்று நினைத்துள்ளார்.

எடு போனை, கூப்பிடு சினேகாவை
படம் பார்த்து முடித்த கையோடு சினேகா பிரிட்டோவுக்கு போன் செய்துள்ளார் விஜய். அம்மணி கலக்கிட்டீங்க என்று பாராட்டியுள்ளார். இதைக் கேட்ட சினேகாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இருக்காத பின்ன பாராட்டினது யாரு.

துள்ளிக் குதித்த சினேகா, பியா
விஜய் போனை வைத்தவுடன் சினேகா பியா பாஜ்பாய்க்கு போன் போட்டு இளைய தளபதி மனதாரப் பாராட்டியதை தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பியா குஷியில் குதித்துள்ளார்.

சங்கீதா என்னைப் பாராட்டியுள்ளாரே
விஜயின் மனைவி சங்கீதா படத்தைப் பார்த்துவிட்டு அதிலும் குறிப்பாக பியாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். இதை விமலா ராணி பியாவிடம் தெரிவித்துள்ளார். உடனே பியா இதை டுவிட்டரில் போட்டு தனது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











