குரங்குகளுக்கு தண்ணீர் தொட்டி... விஜய் மக்கள் இயக்கத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

புதுக்கோட்டை : லாக்டவுன் சமயத்தில் மனிதர்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன. உணவு, தண்ணீருக்காக அவை அலைந்து திரிகின்றன. இதனால் பல தனி நபர்கள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கோடை மற்றம் நெருக்கடி காலங்களில் விலங்குகளை தேடிச் சென்று உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Vijay Makkal Iyakkam builds water tank for monkeys in Pudukkottai

அந்த வரிசையில் புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினரும் உணவு, நீரின்றி தவிக்கும் விலங்குகளுக்காக, குறிப்பாக குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள அனுமன் கோயிலைச்சுற்றி 300 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வருகின்றன. தற்போது கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் ஆள் நடமாட்டமில்லாததால் இவைகள் குடிப்பதற்கு தண்ணீர், பழங்கள், உணவு ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றன.

சுற்றிலும் வனப்பகுதியாக இருந்தாலும் கோடை காலம் என்பதால் வெயிலின் கொடுமையால் தண்ணீருக்கு அலைந்து வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண நினைத்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், புதிய தண்ணீர் தொட்டியை அமைத்துள்ளனர்.

Recommended Video

Thalapathy Vijay நிவாரண நிதி வழங்கினாரா? Thala Ajith, Suriya

இந்த தொட்டிகளில் தினமும் தண்ணீர் நிரப்பி, குரங்குகளின் தாகம் தணிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று குரங்குகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட மற்ற பழங்களையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். தண்ணீர் தொட்டி திறப்பு நாளில் அனுமானுக்கு சிறப்பு பூஜையும் நடத்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X