Bussy Anand - புஸ்ஸி ஆனந்த்துக்கு உடல்நலக்குறைவு.. நள்ளிரவு மருத்துவமனைக்கு ஓடிய விஜய்.. எவ்வளவு பாசம்

சென்னை: Bussy Anand (புஸ்ஸி ஆனந்த்) விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே சொல்லிவருகின்றனர். அதற்கு பக்கபலமாக இருப்பவர் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயாளர் புஸ்ஸி ஆனந்த்.

Vijay Makkal Iyakkam Bussy Anand has suddenly fallen ill Hospitalized Now

விஜய் மக்கள் இயக்கம்: விஜய் மக்கள் இயக்கத்தின் முகமாக விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இருந்தார்கள். ஆனால் விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த்துக்கு ஏற்பட்ட நெருக்கம் தற்போது மக்கள் இயக்கத்தின் முகமாக அவரை மாற்றியிருக்கிறார். மக்கள் இயக்கத்தின் சார்பாக நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை கூட்டம் நடத்துவது, நலத்திட்ட உதவிகளை செய்வது என அனைத்திலும் புஸ்ஸி ஆனந்த் முதல் ஆளாக இருப்பார்.

எல்லாமே அவர்தான்: புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அஷ்ரப்பின் உதவியாளராக இருந்தவர் புஸ்ஸி ஆனந்த். விஜய்யின் ரசிகரான ஆனந்த் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கௌரவ தலைவராக இருந்து பிறகு தலைவரானார். 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார்.

பிரிவுக்கு இவர் காரணமா?: விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக மாறி இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தால்தான் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பலர் கூறினர். ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் ஒரு தரப்பு கூறியது. சமீபத்தில்கூட எஸ்.ஏ.சந்திரசேகரை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவு: லியோ படத்தின் வெற்றி விழாவை ஒருங்கிணைப்பதில் தலைமை ஏற்று கச்சிதமாக செய்து முடித்தார் புஸ்ஸி ஆனந்த். இந்த சூழலில் அவருக்கு திடீரென நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் உடனடியாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் உடனே மருத்துவமனைக்கு விரைந்து ஆனந்த்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X