twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை.. விஜய் மக்கள் இயக்கம்!

    |

    சென்னை : அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 2026 தமிழ்நாட்டிற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் ஆட்சி என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

    செம எனர்ஜி மேடம் ... சைக்கிளிங்கிலும் அசத்துறாரே சமந்தா செம எனர்ஜி மேடம் ... சைக்கிளிங்கிலும் அசத்துறாரே சமந்தா

    மேலும் அந்த போஸ்டரில் பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களை வரிசைப்படுத்தி அவர்களை அடுத்து இனி விஜய்தான் என்றவாறு அந்த பேனர் அமைக்கப்பட்டுள்ளது.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    இதையடுத்து நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற சம்பங்களை மீண்டும் மீண்டும் விஜய் ரசிகர்கள் செய்து வருவது கண்டிக்க தக்கது என்றார்.

    ஆர்வகோளாரால்

    ஆர்வகோளாரால்

    சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால், ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள் , இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன்.

    வருத்தமளிக்கிறது

    வருத்தமளிக்கிறது

    இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

    Recommended Video

    Vijay க்காக என்னை மாற்றிக்கொண்டேன் | S. A. Chandrasekhar | Naan kadavul illai | Filmibeat Tamil
    சர்ச்சையானது

    சர்ச்சையானது

    கடந்த ஆண்டு விஜய்யின் திருமணநாளன்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை சித்தரித்து மதுரையில அங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி இருந்தார்கள் இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    English summary
    Don't put up posters depicting Vijay as the portrait of any party leaders
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X