ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்.. ஆளுநரே விஜய் ஸ்டைலில்தான் இருக்காரேப்பா..
சென்னை: நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லோகரைச் சந்தித்து உரிமை கோறலுக்கான கடிதத்தை வழங்கினார் விஜய். விஜய்யின் தவெக மொத்தம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது. மேலும் மற்ற கட்சியினருக்கும் தவெக அழைப்பு விடுத்துள்ளது.
அதே நேரத்தில் விஜய் மே மாதம் 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் மிகவும் பிரமாண்டாமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் சட்டமன்றமும் புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

ஆளுநரை விஜய் சந்தித்தபோது, ஆளுநரும் விஜய் போல வெள்ளை நிறச் சட்டையும், வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்திருந்ததால் விஜய்யின் ரசிகர்கள் பலரும் ஆளுநரும் விஜய் ரசிகர் தான் போல என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications