Vijay video call: தீ இது தளபதி அங்கிளை வர சொல்லுனு அடம்பிடித்த குழந்தை.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
சென்னை: பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை சில நாட்களுக்கு முன்பாக வாரிசு படத்தின் பாடலை பார்த்து விட்டு விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.
அந்த வீடியோ நடிகர் விஜய்யின் பார்வைக்கு பட்ட நிலையில், உடனடியாக அந்த குழந்தையிடம் வீடியோ காலில் விஜய் பேசி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோ காலில் தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும் விஜய்யிடம் அந்த குழந்தை பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

குழந்தைகளின் ஃபேவரைட்
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நடிகர் விஜய் என்றாலே ரொம்ப பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும் குட்டீஸ்கள் என்றால் சொல்ல தேவையே இல்லை. அரபிக் குத்து, தீ தளபதி, ரஞ்சிதமே என விஜய் பட பாடல்கள் வந்தாலே ஆட ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில், அப்படியொரு குட்டி ஃபேனுக்கு விஜய் செம சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

டான்ஸ் தான் ஸ்பெஷல்
காமெடியான பேச்சும், செம ஸ்பீடான டான்ஸும் தான் குழந்தைகளுக்கு நடிகர் விஜய்யை பிடிக்க முதல் காரணமே என்கின்றனர். நடிகர் விஜய்யும் படத்துக்கு படம் குழந்தைகளை கவரும் வகையில் ஏதாவது ஒரு குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை இந்த வயதிலும் அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார்.

அடம்பிடித்த குழந்தை
விஜய் மாமாவை பார்க்க வேண்டும் என ஊரில் உள்ள ஏகப்பட்ட குழந்தைகள் அடம்பிடித்து வரும் நிலையில், பல்லாவரத்தைச் சேர்ந்த அந்த குழந்தை தீ தளபதி பாடலை பார்த்து விட்டு நடிகர் விஜய்யை சந்தித்தே ஆக வேண்டும் என தனது பெற்றோர்களிடம் அடம் பிடித்து அழும் வீடியோ காட்சி ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவியது.

வீடியோ காலில் வந்த விஜய்
அந்த குழந்தையின் அடம் விஜய்யின் பார்வை வரை சென்ற நிலையில், திடீரென வீடியோ கால் மூலமாக நடிகர் விஜய் அந்த குழந்தையையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசிய காட்சிகளை புஸ்ஸி ஆனந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் ட்வீட்
"சற்றுமுன்.!... செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தளபதி actorvijay அவர்களை என்னைப் பார்க்க வருமாறு இணையத்தில் வைரலான வீடியோவை உடனடியாக தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி குழந்தையின் நலம் விசாரித்தார்.!" என புஸ்ஸி ஆனந்த் ட்வீட் போட்டு அந்த செம க்யூட்டான வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

நீங்க ரொம்ப க்யூட்
நடிகர் விஜய்யை வீடியோ காலில் பார்த்ததும் வெட்கப்பட்டுக் கொண்டே மழலை மொழியில் அந்த குழந்தை கொஞ்சி பேசும் அழகை நடிகர் விஜய் அப்படியே ரசித்துக் கேட்டுக் கொண்டே அந்த குழந்தையிடம் என்ன சாப்பிட்டீங்க என கேட்க, தோசை சாப்பிட்டேன் என சொல்லிய அந்த குழந்தை நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என்றும் பேசிய காட்சிகள் விஜய் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்துள்ளன. குழந்தையின் அப்பா மற்றும் அம்மாவிடமும் நடிகர் விஜய் பேசினார்.


Click it and Unblock the Notifications











