'வாட் எ மேன்': விஜய்யை சந்தித்தது பற்றி மோகன்ராஜா ட்வீட்
Recommended Video

சென்னை: விஜய் இயக்குனர் மோகன் ராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.
மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

மோகன்ராஜா
தன்னை வைத்து வேலாயுதம் படத்தை எடுத்த மோகன் ராஜாவை சந்தித்து பேசியுள்ளார் விஜய். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

எதிர்பார்ப்பு
விஜய், மோகன்ராஜா சந்திப்பு குறித்து அறிந்த தளபதி ரசிகர்களோ அவர்கள் மீண்டும் சேர்ந்து படம் பண்ணப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டனர்.
புகைப்படம்
பல காலம் கழித்து நண்பர் விஜய்யை சந்தித்தேன். என்ன ஒரு மனிதர். நிறைய பேசினோம். வேலைக்காரன் படம் பற்றி அவர் பெருமைப்பட்டது தான் எனக்கு சிறந்த தருணங்களில் ஒன்று என்று ட்வீட்டியுள்ளார் மோகன்ராஜா.

சந்திப்பு
முன்னதாக மோகன்ராஜா ட்விட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தபோது விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுப்பீர்களா என்று தளபதி ரசிகர்கள் கேட்டனர். அதற்கு அவர் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











