Vijay: அவங்களை பார்த்தால் பதற்றமா இருக்கு.. அஜித்தோடு போட்டியில் இறங்கிய விஜய்.. எங்க போய் முடியுமோ?
மதுரை: கடந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய விஜய் சுமார் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் விஜய்யை ரவுண்டு கட்டி விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அவரை பனையூர் பண்ணையார், வொர்க் ஃப்ரம் ஹோம் பொலிடீஷியன் என்றெல்லாம் விமர்சித்தனர். அதில் ஒரு விமர்சனம் தான் செய்தியாளர்களை சந்திக்க வில்லை என்கிற விமர்சனம். விஜய் படத்தில்தான் செய்தியாளர்களை சந்திப்பார், நிஜத்தில் சந்திக்க தனி தைரியம் வேண்டும் என்றெல்லாம் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் இன்று அதாவது மே 1ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க நடிகர் அஜித் குமார் தான் காரணம் என்று கூறி வருகிறார்கள். மேலும், அஜித் பத்ம பூஷன் விருது வாங்கிய பின்னர் சென்னைக்கு வரும்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவருக்கும் நன்றி. விரைவில் நேரில் சந்திக்கலாம் எனக் கூறினார். வழக்கமாக செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருக்கும் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது பெரும் பேசு பொருளாக மாறியது. அதனால்தான் விஜய்யும் அஜித்துக்கு போட்டியாக செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் என பேசி வருகிறார்கள்.

விஜய்: மதுரை விமான நிலையத்திற்கு வந்த விஜய் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " நான் மதுரைக்கு வருவதை தெரிந்து கொண்ட மதுரை தவெக நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நான் இப்போது மதுரைக்கு வந்தது, கொடைக்கானலில் நடைபெறும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகத்தான்.
பதற்றம்: மதுரை மக்களையும் நிர்வாகிகளையும் ரசிகர்களையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரைவில் சந்திக்கிறேன். நான் இப்போது கொடைக்கானலுக்கு சென்று படக்குழுவினருடன் இணையவேண்டும். நான் இங்கிருந்து கிளம்பி எனது வேலையை பார்க்க போகிறேன். அதேபோல் ரசிகர்களும் நிர்வாகிகளும் அவரவர் இல்லத்திற்கு பத்திரமாகச் செல்ல வேண்டும். யாரும் எனது காரை பின் தொடர்வது, பைக்கில் வேகமாக காரை துரத்துவதோ கூடாது. மேலும் சிலர் பைக்கில் வேகமாக வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வருகிறார்கள். பைக்கில் நின்று கொண்டு ஓட்டுகிறார்கள். இது போன்ற காட்சிகளை பார்த்தால் மனதிற்கு மிகவும் பதற்றமாக உள்ளது. அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்" எனவும் பேசியுள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காத விஜய் புறப்பட்டுச் சென்றார்.

ரசிகர்கள்: விஜய்யின் இந்த பேட்டி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அவர் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய் செய்தியாளர்களை சந்தித்தது தொடர்பாக விமர்சித்தவர்களுக்கு விஜய் மிகவும் சைலண்ட்டாக பதிலடி கொடுத்து விட்டார் எனக் கூறி வருகிறார்கள். மேலும் அவர் ஜன நாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன் எனக் கூறியதால், பலரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் எனவும், எப்போது விஜய் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்துவார் எனக் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











