ஆட்சியமைப்பதில் சொதப்பும் விஜய் அண்ணா.. கிஃப்ட் கேட்டு டார்ச்சர் செய்யும் அண்ணி.. பறக்கும் மீம்ஸ்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பரபரக்க ஆரம்பித்திருக்கிறது. திமுக, அதிமுகவை இந்தத் தேர்தலில் பின்னுக்கு தள்ளி மொத்தம் 108 தொகுதிகளை தவெக பிடித்தாலும்; பெரும்பான்மைக்கு தேவையான 118 இல்லை. இதன் காரணமாக மற்ற கட்சிகளின் ஆதரவை எதிரோக்கும் நிலைக்கு சென்றிருக்கிறார் அவர். இந்நிலையில் தற்போது அரசியல் கள நிலவரங்களை வைத்து சோஷியல் மீடியாவில் எக்கச்சக்க மீம்ஸ்கள் பறந்துவருகின்றன.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பெரிய பூகம்பத்தையே அரசியல் களத்தில் உண்டு செய்திருக்கிறது. மொத்தம் 108 தொகுதிகளை பிடித்துவிட்டாலும் 118 என்ற மேஜிக் நம்பர் கிடைக்கவில்லை. எனவே மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரியது தவெக. அதில் முதல் ஆளாக சென்றது காங்கிரஸ். இத்தனைக்கும் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பத்து வருட நட்பு இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதன்முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்தான். இருப்பினும் காங்கிரஸ் இப்படி செய்தது உடன்பிறப்புகளிடையே கடுப்பை வரவழைத்திருக்கிறது.

அடுத்த மூவ் என்ன?: இப்போதைய நிலவரப்படி தவெகவுக்கு மொத்தம் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் கீ ரோலாக ப்ளே செய்வது விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும்தான்.
தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் நிச்சயம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும்தான். ஆனாலும் கூட்டணி தர்மம் உள்ளிட்ட விஷயங்களை கணக்கில் கொண்டு ஆதரவு கொடுக்க தயங்கிவருகிறார்கள். இறுதியாக என்னதான் நடக்குமோ என்ற திக் திக் எல்லோருக்குமே ஏற்பட்டுவிட்டது என்பது உண்மை.
தவெகவினரின் நிலைமை?: இந்த விஷயத்தில் தவெகவினரின் நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஏகத்துக்கும் சோக கீதத்தையும், கடுப்பான வார்த்தைகளையும் பேசிவருகிறார்கள். சிலரோ விஜய்யின் வீட்டுக்கு முன் நின்றுகொண்டு வேதனையோடு பார்த்துவருகிறார்கள். இதற்கிடையே விஜய்யை ஒழிப்பதற்கு திமுகவும், அதிமுகவும் கை கோர்த்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இப்படி நாளுக்கு நாள் அரசியல் களம் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தவெகவால் உருவாகியிருக்கும் இப்போதைய அரசியல் களத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகிறார்கள்.
மீம்ஸ் குடோன்: அதன்படி ஒரு மீமில் படிக்காதவன் பட ஸ்டில்லை பயன்படுத்தி, 'என்ன விஜி நீ முதலமைச்சராகி மக்களுக்காக போராடுவன்னு பார்த்தால் உன்னை முதலமைச்சர் ஆக்குவதற்கே மக்கள்தான் போராடணும் போலயே' என்று கலாய்த்திருக்கிறார்கள். இன்னொரு மீமில், கண்டேன் காதலை படத்தில் சந்தானத்தை வெறுப்பேற்றுவதற்காக தமன்னா கட்டிப்பிடிக்கும் சீனை எடுத்து போட்டு, 'சந்தானம்தான் தவெக என்றும். பரத் திமுக, தமன்னா அதிமுக' என்றும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
பிறந்தநாள் பரிசு எங்கே?: அதேபோல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பசுபதி கேரக்டரை எடுத்து போட்டிருக்கிறார்கள். தவெக விஜய்தான் பசுபதியாம். அவரிடம் மக்கள் சென்று, 'அண்ணே அந்த் ஆறு சிலிண்டர்கள்' என கேட்க; அதற்கு அவரோ, 'அட இருமா நானே ஆறு எம்.எல்.ஏக்களை தேடிட்டு இருக்கேன்' என்று சொல்லும்படி மீமை உருவாக்கியிருக்கிறார்கள்.
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, மைனா படத்தில், 'வீட்டுக்கு எப்போ வருவீங்க' என டாக்சிக்காகவும், டார்ச்சராகவும் கேட்கும் நடிகையின் புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், அந்த பெண்மணிதான் அண்ணியாம்.
அவர் விஜய்க்கு ஃபோன் செய்து, 'என் பிறந்தநாள் பரிசு எங்கே?' என கேட்பது போன்று கலாய்த்துள்ளார்கள். முன்னதாக தேர்தல் முடிவுகள் வந்த அன்றுதான் திரிஷாவின் பிறந்தநாளும் வந்தது. தவெகவை வெற்றி பெற செய்து தமிழ்நாட்டையே திரிஷாவுக்கு விஜய் பரிசாக கொடுத்துவிட்டார் என்று பலரும் சொல்ல தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
