தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் நடிகர் விஜய்.. தியேட்டரில் 100 சதவிகித அனுமதிக்கு கோரிக்கை!

By

சென்னை: நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமியை நேற்று திடீரென்று சந்தித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மற்ற மொழிக்கான டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி முடித்துள்ளது. மாஸ்டர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது

முதன்முறை

முதன்முறை

விஜய் நடிக்கும் படம், ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாவது இதுதான் முதன்முறை. இந்த படத்தின் இந்தி மொழி மாற்றத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வட இந்திய சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. படத்தின் டீசர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இந்நிலையில் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

முதலமைச்சருடன் சந்திப்பு

முதலமைச்சருடன் சந்திப்பு

இதற்கிடையே இந்த படம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேற்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தியேட்டரில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூறு சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

ரகசியமாக சந்திப்பு

ரகசியமாக சந்திப்பு

நடிகர் விஜய்யுடன் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உட்பட சிலரும் முதல்வரை சந்தித்துள்ளனர். இந்த தகவல் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காகவே அவர் ரகசியமாக முதல்வரை சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X