விஜய்யை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை ரீமேக்!
அமரர் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டுள்ளாராம்.
விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. சீமான் கட்சியில் பிஸியாக இருந்த அவர், மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளார்.

எங்க வீட்டுப் பிள்ளை
எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டரானது. எம்ஜிஆர் படங்களில் ஆக்ஷன் க்ளாஸிக் என்றால் அது இந்தப் படம்தான்.

எம்ஜிஆர்
இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். சாணக்யா இயக்கியிருந்தார். இப்படத்தினை ரீமேக் பல நடிகர்கள் முயன்றும் முடியாமல் போனது.

விஜய்
ஆனால் விஜய்யை வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாராம் செல்வபாரதி. இவர் ஏற்கெனவே வசீகராவில் விஜய்யை எம்ஜிஆர் ரசிகராகத்தான் காட்டியிருப்பார். இப்போது எம்ஜிஆர் வேடத்திலேயே விஜய்யை நடிக்க வைக்கப் போகிறார்.

விஜயா புரொடக்ஷன்ஸ்
இந்த விஷயத்தை விஜய்க்கு அவர் சொன்னதும், மிக மகிழ்ந்த விஜய், கொஞ்சம் பொறுத்திருங்க என்று கூறியிருக்கிறாராம். அஜீத்தை வைத்து வீரம் பண்ண விஜயா கம்பைன்ஸ், இந்தப் படத்தை விஜய்யை வைத்துத் தயாரிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் பக்தர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..!


Click it and Unblock the Notifications











