சிவராஜ்குமார் படத்தை இயக்குவது உண்மைதான்... கன்பர்ம் பண்ணினார் விஜய்மில்டன்... விஜய்ஆண்டனி படம்?

By

சென்னை: இயக்குனர் விஜய் மில்டன் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

தமிழில் பிரியமுடன், சாக்லேட், சாமுராய், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் மில்டன்.

இப்போது சிம்புதேவன் இயக்கும் கசடதபற படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர், அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கோலிசோடா படத்தை இயக்கினார். இது ஹிட்டானது. இதையடுத்து விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன. பின்னர் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாயின.

மழை பிடிக்காத மனிதன்

மழை பிடிக்காத மனிதன்

இந்தப் படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் தயாரிப்பதாகக் கூறப்பட்டது. படத்துக்கு 'மழை பிடிக்காத மனிதன்' என டைட்டில் வைத்துள்ளதாகவும் படப்பிடிப்பு, கோவா, டையூ-டாமன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

ரவி அரசுவின் ஆர்டிஎஸ்

ரவி அரசுவின் ஆர்டிஎஸ்

இந்நிலையில், விஜய் மில்டன் கன்னட படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதில் கன்னட செஞ்சுரி ஸ்டார் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சிவராஜ்குமார் இப்போது பஜ்ராங்கி 2 படத்தில் நடித்துவருகிறார். இதில் பாவனா ஹீரோயின். இதையடுத்து ஆர்டிஎஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதை ரவி அரசு இயக்குகிறார்.

தனஞ்செய்

தனஞ்செய்

இவர், அதர்வா நடித்த ஈட்டி படத்தை தமிழில் இயக்கியவர். அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ஐங்கரன் படத்தை இயக்கியுள்ளார். இப்போது கன்னடப் படம் இயக்கிறார். ரவிஅரசு இயக்கும் படத்துக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார். இதில் கன்னட நடிகர் தனஞ்செய், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தகறு என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

உண்மைதான்

உண்மைதான்

இதுபற்றி விஜய் மில்டனிடம் கேட்டபோது, 'சிவராஜ்குமாரை இயக்கப் போவது உண்மைதான். மேலதிக விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்' என்றார். இந்தப் படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவரா, அல்லது அதற்கு முன்பா என்பதை விஜய் மில்டன் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X