விஜய் ஆண்டனியின் சின்ன எக்ஸ்பிரெஷனும் அழகு.. ப்ளூ சட்டை போட்டா கண் தெரியாதா?.. விமர்சித்த இயக்குநர்

சென்னை: தமிழில் ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். யாருடைய படமாக இருந்தாலும் கிழித்து தொங்கவிடும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்; பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இருந்தாலும் தனது மனதுக்கு பட்டதை திரை விமர்சனமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஆன்டி இந்தியன் என்ற படத்தையும் அவர் இயக்கினார். இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறனை இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் விமர்சித்திருக்கிறார்.

உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

Vijay Antony Blue Sattai Maran Vijay Milton

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.

தனிநபர் தாக்குதல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

ரோமியோ சர்ச்சை: சமீபத்தில்கூட விஜய் ஆண்டனி நடித்திருந்த ரோமியோ படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் ப்ளூ சட்டையோ அடுத்தடுத்த நாட்களில் விஜய் ஆண்டனியை தொடர்ந்து ட்ரோல் செய்தார். அவரது இந்த செயலுக்கு ஒருதரப்பு ஆதரவு தெரிவிக்க; இன்னொரு தரப்பு கண்டனம் தெரிவித்தது.

விஜய் மில்டன் விமர்சனம்: இந்தச் சூழலில் விஜய் மில்டனின் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய விஜய் மில்டன், "ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனி ரொம்ப அழகாக நடித்திருந்தார். ப்ளூ சட்டை போட்டிருந்தா மட்டும் கண்ணு தெரியாதானு தெரியல. விஜய் ஆண்டனியின் கரியரில் சின்ன சின்ன எக்ஸ்பிரெஷனைக்கூட அழகாக வெளிப்படுத்திய படம் என்றால் அது ரோமியோதான்.

Vijay Antony Blue Sattai Maran Vijay Milton

மழை பிடிக்காத மனிதன்: அதைவிட பல மடங்கு மழை பிடிக்காத மனிதன் படத்தில் செய்திருக்கிறார். மேகா ஆகாஷும், அவரும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் பேசிக்கொண்டிருக்கும் நீளமான சீன் உள்ளது. அந்த சீனை ரொம்ப பிடித்து எழுதினேன். அது அவ்வளவு அழகாக வந்திருக்கிறது" என்றார். விஜய் மில்டனின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள்; எல்லோரையும் விமர்சிக்கும் ப்ளூ சட்டையை விஜய் மில்டன் போகிற போக்கில் வைத்து செய்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X