Vijay: விஜய் இனி நடிக்க மாட்டேன்னு சொன்னார்... அவருக்கு அதுதான் விருப்பம்... லீக்கான ரகசியம்!

சென்னை: கோலிவுட்டின் டாப் மோஸ்ட் ஹீரோவாக கலக்கி வருகிறார் விஜய்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய், அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இதனால், விரைவில் விஜய் அரசியலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

 Vijay Milton has opened up that Thalapathy Vijay preferred to be a director rather than acting

இந்நிலையில், விஜய் இனி நடிக்க மாட்டேன் என சொன்னது பற்றி பிரபலம் ஒருவர் மனம் திறந்துள்ளார்.

விஜய் இனி நடிக்க மாட்டேன்னு சொன்னார்
1992ல் நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் பல தடுமாற்றங்களை கடந்து நாயகனாக மாஸ் காட்டிய விஜய், இன்று கோலிவுட்டின் டாப் மோஸ்ட் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இந்தாண்டு வாரிசு படத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த விஜய், அடுத்து லியோ மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ, வரும் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகிறது. லியோ காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்ட விஜய், தற்போது சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த அவர், விரைவில் அரசியலில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இனி நடிக்க மாட்டேன் என விஜய் சொன்னதாக பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். 1998-ம் வெளியான ப்ரியமுடன், 1999ல் ரிலீஸான நெஞ்சினிலே படங்களில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்களுக்கு விஜய் மில்டன் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது விஜய்யும் விஜய் மில்டனும் நல்ல நண்பர்களாக பழகியுள்ளனர்.

 Vijay Milton has opened up that Thalapathy Vijay preferred to be a director rather than acting

ப்ரியமுடன், நெஞ்சினிலே படப்பிடிப்பின் போது, தனது கேரியர் குறித்து விஜய் மில்டனிடம் பேசியுள்ளார் விஜய். அதில், 2000ம் ஆண்டிற்குப் பின் நடிக்கப் போவதில்லை என விஜய் கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் மில்டன் ஏன் எதற்கு எனக் கேட்க, தனக்கு இயக்குநராக வேண்டும் என்பது தான் ஆசை என விஜய் கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னர் நடிப்பில் ஆர்வம் காட்டிய விஜய், இன்று மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் விஜய்.

அதேநேரம் தன்னால் முடியாததை தனது மகன் சஞ்சய் மூலம் நிறைவேற்றவுள்ளார் விஜய். விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் மகன் சஞ்சய், தற்போது குறும்படங்கள் எடுத்து வருகிறார். இதனால், விரைவில் அவர் இயக்குநராக தனது கேரியரை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X