பிரபல கன்னட ஹீரோ சிவராஜ் குமாரை இயக்குகிறார் விஜய் மில்டன்.. கூடவே அவரும் இருக்காராம்ல..!
சென்னை: இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன், அடுத்து சிவராஜ்குமாருடன் இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழில் பிரியமுடன், சாக்லேட், சாமுராய், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், விஜய் மில்டன்.
இப்போது சிம்புதேவன் இயக்கும் கசடதபற படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர், அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

விஜய் ஆண்டனி
இதையடுத்து கோலிசோடா படத்தை இயக்கினார். சமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் இது. அடுத்து விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன. பின்னர் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

சிவராஜ்குமார்
இந்நிலையில் அவர், கன்னட சினிமாவுக்கு செல்வதாகவும் கூறப்பட்டது. விஜய் மில்டன் இயக்கத்தில் கன்னட செஞ்சுரி ஸ்டார் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியாயின. இந்நிலையில் அதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

டாலி தனஞ்ஜெயா
சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான படம், டகரு (Tagaru). இதில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசபட்டவர், டாலி தனஞ்ஜெயா. இருவரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஹீரோயின் யாரென்று முடிவாகவில்லை. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சூர்யா வெளியிட்டார்
இந்த படத்தைத் தமிழில், கோலிசோடா, கடுகு படங்களைத் தயாரித்த விஜய் மில்டனின் ரஃப் நோட் நிறுவனம் கிருஷ்ண சர்தக்கின் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி. விஜய்மில்டன். இசை, ஜெ.அனூப் சீலின். இதன் அறிவிப்பை, சிவராஜ்குமார் பிறந்த நாளான இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications











