twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தமிழ்நாட்டின் புதிய ஜி.எஸ்.டி.'... விஜய் மில்டன் சொன்ன ரகசியம்!

    விஜய் மில்டன் இயக்கதில் உருவாகியுள்ள கோலி சோடா 2ன் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

    |

    சென்னை: கோலி சோடா 2ம் பாகத்தின் பெயரை சுருக்கி ஜி.எஸ்.டி. என வைத்தது எதற்கு என இயக்குனர் விஜய் மில்டன் விளக்கம் அளித்துள்ளார்.

    ரவ்நோட் புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரித்து நடித்துள்ள படம் கோலி சோடா 2. விஜய் மில்லடன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

    Vijay miltons Goli soda 2 trailer launched

    விழாவில் பேசிய இயக்குனன் விஜய் மில்டன், "சமுத்திரக்கனியும், கௌதம் மேனனும் தான் இந்த படத்தின் இரண்டு பெரிய தூண்கள். சமுத்திரக்கனிக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம்.
    இயல்பாகவே அவர் யாருக்கும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி நடப்பவர். யாருக்கு பிரச்சினை என்றால் ஓடி வந்து உதவுபவர். இதுவரை அவர் அது போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.

    ஆனால் இந்த படத்தில் ஒரு தோன்றவனின் கதாபாத்திரம் அவருக்கு. எது நடந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கிபோகும் கேரக்டர். இந்த படத்துக்காக இதுவரை அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

    அதுபோல, இந்த படத்தில் முதல் பத்து நிமிடங்கள் மற்றும் கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே கௌதம் வருவார். படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் அவர் தான். ஓடுனவன் திரும்பினா என்ன ஆகும் என்பது தான் கதைக் கரு.

    படத்தை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் அவர் தான். ஓடுனவன் திரும்பினா என்ன ஆகும் என்பது தான் கதைக் கரு.

    ஜி.எஸ்.டி. என்ற வார்த்தையை கேட்டாலே மக்கள் கடுப்பாகிறது நேரத்தில், படத்துக்கு ஜி.எஸ்.டி. என பெயரை சுருக்கி வைக்க தயாரிப்பாளர் தான் காரணம். ஆனால் அது இப்போது டிரெண்டிங்காக மாறியுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியின் போது படக்குழு சார்பில் இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. படத்தின் விளம்பரத்துக்காக செய்யப்படும் செலவை இதற்கு பயன்படுத்தும் எண்ணத்தில், ஜிஎஸ்டி வண்டி ஏற்பாடு செய்து உதவுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    English summary
    The trailer of Vijay milton's Goli Soda 2 was launched yesterday by the movie team. In the event director vijay milton explained about GST.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X