கடுகு: விஜய் மில்டனுக்காக 'புலிவேஷம்' போட்ட ராஜகுமாரன்

By Manjula

சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் நடிக்கும் படத்திற்கு 'கடுகு' என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

'கோலி சோடா', '10 என்றதுக்குள்ள' படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

Vijay Milton's Next Movie Title Kadugu

தேவயானியின் கணவர் ராஜகுமாரன், பரத் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு 'கடுகு' என்று வித்தியாசமாக படக்குழு பெயர் சூட்டியிருக்கிறது.

இந்நிலையில் ராஜகுமாரன் இப்படத்தில் புலிவேஷம் போடும் தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

இதற்காக திருநெல்வேலி, சிவகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து நிஜமான புலிக்கலைஞர்களை வரவழைத்து, ராஜகுமாரனுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர்.

சுமார் 3 மாதங்கள் பயிற்சி வரை பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே இப்படத்தில் ராஜகுமாரன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் நடித்திருக்கிறார்.

மே 9 ம் தேதி முதல் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்க விஜய் மில்டன் திட்டமிட்டிருக்கிறார். 'கடுகு' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X