விழா மேடையில் ரகசியத்தை உடைக்க பார்த்த நாயகன்... தடுத்து நிறுத்திய இயக்குனர்!
விழா மேடையில் ரகசியத்தை உடைக்க பார்த்த நாயகனை இயக்குனர் விஜய் மில்டன் தடுத்து நிறுத்தினார்.
சென்னை: கோலி சோடா 2ன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், படம் பற்றிய ரகசியத்தை உடைக்க பார்த்த நாயகனை இயக்குனர் விஜய் மில்டன் தடுத்து நிறுத்தினார்.
ரவ்நோட் புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரித்து நடித்துள்ள படம் கோலி சோடா 2. விஜய் மில்லடன் இயக்கியுள்ள இந்த படத்தில், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரோகினி, ரேகா, செம்பன் வினோத் ஜோஸ், பாரத் சீனி, இசக்கி பரத், வினோத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பேசினர். அப்போது பேசிய இசக்கி பரத், படம் வெளியான பிறகு தனக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளதாகக் கூறினார்.
அது என்ன என்று அவர் சொல்ல வருவதற்குள், இயக்குனர் விஜய் மில்லடன் கண்ணசைத்து, அதை சொல்லதே எனக் கூறிவிட்டார். இதனால், சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் நாயகன் பேச்சை முடித்துக்கொண்டார்.
அது என்ன ரகசியம் என பலர் கேட்டபோதும், விரைவில் தெரியவரும் என விஜய் மில்டன் நழுவிவிட்டார். கத்திரிக்காய் முத்தினாள் சந்தைக்கு வராமலா போய்விடும் என பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











