டைரக்ஷனுக்குத்தான் முதலிடம்... சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் விஜய் மில்டன்!

By Shankar

Vijay Milton withdraws from Suseenthiran project
சென்னை: சுசீந்திரன் படத்திலிருந்து திடீரென பாதியில் விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

'வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து வீர தீர சூரன் என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டவர் விஜய் மில்டன். இப்போது திடீரென படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி வெளி வந்துவிட்டார்.

இதில் அதிர்ந்து போன சுசீந்திரன், பிறகு வேறு வழியில்லாமல் விஜய் மில்டனுக்கு பதிலாக இப்போது மதியை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பலனாக படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரிய நடிகர்கள் படம் பண்ண அழைப்பதால், இனி ஒளிப்பதிவு பொறுப்பை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம் விஜய் மில்டன்.

விஜய் மில்டன் சொன்ன ஒரு கதை நடிகர் விக்ரமுக்குப் பிடித்துப் போனதால் உடனடியாக கால்ஷீட் தந்துவிட்டாராம். ஐ முடிந்த பிறகு இந்தப் படத்தைப் பண்ணலாம் என உறுதியளித்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X