Vijay Mohanlal: டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில்..? விஜய் - மோகன்லால் பஞ்சாயத்து தெரியுமா..?
சென்னை: விஜய்யின் லியோ படத்துக்கு கேரள ரசிகர்களிடம் திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லியோ படத்தை பாய்காட் செய்வதாக மோகன்லால் ரசிகர்கள் 'பாய்காட் லியோ' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் - மோகன்லால் குறித்து ஜில்லா பட இயக்குநர் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
ஜில்லா டைட்டில் கார்டில் விஜய், மோகன்லால் இருவரில் யாருடைய பெயரை முதலில் போடுவது என்ற பஞ்சாயத்து தான் அது.

விஜய் - மோகன்லால் டைட்டில் கார்டு பஞ்சாயத்து: தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ஒரு பக்கம் லியோ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும், இன்னொரு பக்கம் படத்தின் ப்ரொமோஷனும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லியோ படத்துக்கு திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முக்கியமாக விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள கேரளாவில், லியோ படத்துக்கு எதிராக பாய்காட் ட்ரெண்ட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை முதல் Kerala Boycott Leo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கான காரணங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதாவது, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை விஜய் ரசிகர்கள் மரியாதை இல்லாமல் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், லியோ படத்தில் இருந்து கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தனித்தனி போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் மலையாளத்தில் விஜய்யின் லியோ போஸ்டர் வெளியாகவில்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதேநேரம் மோகன்லால் ரசிகர்கள் சிலர், லியோ படத்துக்கு தங்களின் ஆதரவு உண்டு என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
மோகன்லாலின் உண்மையான ரசிகர்கள் யாரும், விஜய்யின் லியோவை பாய்காட் செய்யமாட்டார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் - மோகன்லால் இடையேயான நட்பையும் மரியாதையையும் புரிய வைக்கும் விதமாக ஒரு வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். அதில், ஜில்லா பட இயக்குநர் நேசன், விஜய் - மோகன்லால் இருவரை பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
தமிழில் விஜய்யும் மோகன்லாலும் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கிய இந்தப் படம் தமிழ்நாடு, கேரளா என இருமாநில ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என இயக்குநர் நேசனுக்கு குழப்பம் வந்துள்ளது. உடனே இதுபற்றி விஜய்யிடம் அவரே கேட்டுள்ளார். அதற்கு விஜய்யோ, மோகன்லால் சார் பெயர் தான் டைட்டிலில் முதலில் வர வேண்டும் என்றாராம்.
பின்னர் இதே கேள்வியை மோகன்லாலிடமும் கேட்டுள்ளார் இயக்குநர் நேசன். அதற்கு அவரோ, "இது விஜய் படம் தான, அப்போ விஜய் பெயர் தான் முதலில் வரணும். என் பெயர் எங்க வந்தாலும் பிரச்சினை இல்ல" என பெருந்தன்மையாக கூறிவிட்டாராம். இருவருமே இப்படி விட்டுக்கொடுத்து பேசியதை பார்த்து எனக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், மோகன்லால் பெயர்தான் முதலில் விஜய் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக, இயக்குநர் நேசன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை மோகன்லால் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவதோடு, விஜய்யின் லியோவுக்கு எங்களின் சப்போர்ட் உண்டு என்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











