TVK Vijay: அம்மாவை மதிக்காமல் போனாரா விஜய்?.. அப்போ சிஎம், இப்போ பிஎம் என ஷோபா சூப்பர் பேச்சு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய். அந்த விழாவில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் மற்றும் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பங்கேற்றனர். ஆனால், விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகள் பங்கேற்கவில்லை. புஸ்ஸி ஆனந்த், ஜெகதிஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மேடையில் ஏறி விஜய் பேசும் போது தனது அம்மா மற்றும் அப்பா வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்து பேசியதை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அதே போல, ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு திரும்பிய விஜய்யின் கைகளை பிடித்து பேச ஷோபா வந்த போது, விஜய் கண்டுக் கொள்ளவில்லை என்கிற வீடியோவை ஷேர் செய்து விஜய்க்கு எதிரான ட்ரோல்களும் பறக்கின்றன.

Vijay TVK Shoba Chandrasekar

இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் விஜய்க்கு வாழ்த்து மடல் வாசித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அம்மான்னா சும்மா இல்லேடா: நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை விட்டுப் பிரிந்து இருந்தார். ஆனால், அதன் பின்னர், அப்பாவின் அறுவை சிகிச்சை அறிந்து வந்து பெற்றோர்களை சந்தித்த விஜய் அவ்வப்போது அவர்களை சந்தித்தும் பேசியும் வருகிறார். விஜய்யின் நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் தவறாமல் கலந்துக் கொள்கின்றனர்.

மேடையில் பேச விடவில்லை: விஜய் கட்சி மேடையில் தனது பெற்றோர்களை அவர் பேசவிடவில்லை. ஆனால், விஜய்க்கு வாழ்த்து மடலை தயார் செய்து வந்த ஷோபா சந்திரசேகர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதை வாசித்து ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும், விஜய் அம்மாவை மதிக்கவில்லை என்கிற சர்ச்சைக்கும் அவர் தீனி போடாமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சிஎம், பிஎம்: "நாட்டுக்கே ராஜாவானாலும் எனக்கு விஜய் மகன் தான். விஜய்யின் முதல் அரசியல் படி இது, நாட்டு மக்களுடன் நெருங்கி பழகு, கட்டி அணை, அவர்களின் பிரச்சனையை கேள், இப்போது இருப்பது போல எப்போதும் உண்மையுள்ளவனாக இரு, பெண்ணுரிமை காப்பாற்று, மக்களுக்கு சேவை செய் என அழகாக பேசி வந்த அவர் நான் எப்போதோ சிஎம் தான் என்றுக் கூறி அதற்கு விளக்கமாக Celebrity Mother என்றார். இப்போ தான் பிஎம் என்று சொல்லி அதற்கு விளக்கமாக Proudest Mother என ஷோபா சந்திரசேகர் பேசியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X