அச்சச்சோ.. காலில் எவ்வளவு பெரிய கட்டு.. விஜய் பட நடிகைக்கு என்ன ஆனது?.. பதறிப்போன ரசிகர்கள்!

நிழல் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி காலில் காயம் ஏற்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

Bigboss janani injured Vijay movie actress injured janani video

கொஞ்சும் தமிழில் பேசிய ஜனனி: பிக்பாஸ் வீட்டிற்குள் சரியாக விளையாடவிட்டாலும், தமிழ் ரசிகர்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்து அவர்களது அன்பையும் பெற்றார். கொஞ்சும் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களின் மனதை ஈர்த்தார். இவர் மீது பல விமர்சனங்களை வைத்த போதும், தைரியமாக விளையாடினார். இந்நிலையில் திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு லியோ படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட வாய்ப்பு: பிக்பாஸ் பிரபலங்கள் திரைத்துறையிலும் தங்களது தடத்தை பதித்து வரும் நிலையில், இவருக்கும் அதே போன்ற ஜாக்பாட் தான் விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு. நடிகையாக அறிமுகமாகும் முதல் படமே விஜய், த்ரிஷா என்பதால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அவருக்கு கிடைத்த கதாப்பாத்திரம் சிறியதாக இருந்தாலும், கச்சிதமாக பொருந்தி போனார். விஜய்யுடன் இணைந்து நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

உசுரே படத்தில் கதாநாயகி: லியோ படத்திற்கு பிறகு நல்ல ரோலுக்காக காத்திருந்த ஜனனி, உசுரே படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மாெழிகளில் உருவாகி வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக டிஜே அருணாச்சலம் நடித்துள்ளார். உசுரே படத்தின் போஸ்டர் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிக்பாஸ் ஜனனி, நடிகை அவதாரம் எடுத்து எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் சர்ப்ரைஸ் அளித்தார்.

Bigboss janani injured Vijay movie actress injured janani video

நிழல் படத்தில் சீரியல் நடிகர்: லியோ படத்திற்கு பிறகு நடிகை ஜனனிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. உசுரே படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நிழல் படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஆரியனுக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார். இப்படத்தில் ரமேஷ் கண்ணா, மதன்குமார், திவ்யா கிருஷ்ணன், ஹரி விஜய் என பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

விபத்தில் சிக்கிய ஜனனி: நிழல் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் ஜனனி காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காலில் பெரிய கட்டுடன் அவர் நடக்க முடியாமல் வரும் வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சினிமா நண்பர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Read more about: bigboss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X