வெளியானது வாரிசு பர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் உற்சாகம்.. 2வது லுக் வெளியாகுமா என எதிர்பார்ப்பு!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது.
படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.

தளபதி 66 படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சூட்டிங்கும் துவங்கியது. தொடர்ந்து ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. சில தினங்கள் இந்த சூட்டிங் தொடர்ந்தது.
Recommended Video

சென்னையில் சூட்டிங்
தமிழகத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று படத்தின் சூட்டிங்கை சென்னைக்கு மாற்றினார் விஜய். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து வருகிறது. பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடைபெற்று வருகிறது.

டைட்டில் அறிவிப்பு
படத்தின் டைட்டில் அறிவிக்கப் படாமல் இருந்த நிலையில், தற்போது நாளைய தினம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த டைட்டில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அப்பா -மகன் உறவு
படத்தில் அப்பா -மகன் உறவு பிரதானமாக கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது இந்த டைட்டில் உறுதியாகியுள்ளது.

2வது லுக் வெளியாகுமா?
கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளையொட்டி முந்தைய தினம் மாலையில் இதேபோல பீஸ்ட் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது. தொடர்ந்து நள்ளிரவில் இரண்டாவது லுக் வெளியானது. இதேபோல தற்போது வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது லுக் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாள் பரிசு
விஜய்யின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் கேக் வெட்டி ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினர். அதே வேளையில் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி அவர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசாக கிடைத்தது. இதேபோல தற்போது வாரிசு படத்தின் இரண்டாவது லுக் நள்ளிரவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்தியளிக்காத பான்ட்
விஜய் படத்தின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் காமன் டிபி, வீடியோக்கள், மாஷ்அப்கள் என்று அதகளப்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு போதிய திருப்தியை அளிக்கவில்லை என்றே தெரிகிறது. பர்ஸ்ட் லுக்கில் விஜய் மாஸாக இருந்தாலும் தலைப்பின் பாண்ட் எதிர்பார்த்த அளவில் இல்லை என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாளை தளபதி 67 அறிவிப்பு?
நள்ளிரவில் இரண்டாவது லுக் வெளியாகும் நிலையில், அந்த போஸ்டரின் பாண்ட் உள்ளிட்டவை ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே நாளைய தினம் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











