காசு கேட்டான்.. தரல.. அதான் இப்படி.. பிரபல விமர்சகரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய விஜய் வில்லன்!

மும்பை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். அதிலும் அந்த படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமாலின் மிரட்டலான நடிப்பு இன்னமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.

கடந்த வாரம் வித்யுத் ஜமால் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான கிராக் திரைப்படம் படுமோசமாக உள்ளதாக பிரபல பாலிவுட் விமர்சகர் சுமித் கடேல் கடுமையாக விமர்சித்து இருந்தார். மற்றொரு படத்தை புகழ்ந்து பாராட்டி தள்ளினார். இந்நிலையில், தன்னிடம் அந்த விமர்சகர் லஞ்சம் கேட்டார் என்றும், அதற்கு தான் தரமுடியாது என மறுத்ததால் இப்படி ஒரு விமர்சனத்தை கொடுத்திருக்கிறார் என ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Vijay movie Villain actor Vidyut Jammwal slams Reviewer Sumit Kadel for asking bribe

துப்பாக்கி வில்லன்: பாலிவுட் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த வித்யுத் ஜமால் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். துப்பாக்கி திரைப்படம் அவருக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார்.

கிராக் படம்: ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த வித்யுத் ஜமால் அதன் பின்னர் பாலிவுட்டில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். மேலும் தான் சம்பாதித்த பணத்தை வைத்து புதிதாக படங்களையும் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். கடந்த வாரம் அவர் தயாரித்து நடித்து வெளியான கிராக் திரைப்படம் ஆக்சன் படமாக வெளியானது.

Vijay movie Villain actor Vidyut Jammwal slams Reviewer Sumit Kadel for asking bribe

மோசமான விமர்சனம்: படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே பிரபல பாலிவுட் விமர்சகர் என சொல்லிக் கொள்ளும் சுமித் கடேல் ட்விட்டர் பக்கத்தில் அளித்த விமர்சனத்தில் இந்தப் படத்தை குப்பை படம் என்று நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார்.

லஞ்சம் கேட்டார்: அவரது விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால், லஞ்சம் கேட்பதும் தவறு, லஞ்சம் கொடுப்பதும் தவறு.. நான் இதில் எந்த தவறையும் செய்யவில்லை.. லஞ்சம் கொடுக்க முடியாது எனக் கூறிய நிலையில், சுமித் கடேல் தன்னை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் எடுத்துப் போட்டு, ஒவ்வொரு முறையும் நீங்கள் யாரையெல்லாம் புகழ்கிறீர்களோ, அவர்களிடம் எல்லாம் பணத்தை வாங்கிட்டு தான் பேசுறீங்க என்பதை புரிந்து கொள்கிறேன் என்றும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பொய்யான பழி: வித்யுத் ஜமாலின் ட்வீட்டை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் நீங்களாவது அந்த ரெண்டு ரூபா விமர்சகரின் முகத்திரையை கிழித்து எறிந்தீர்களே சூப்பர் என பாராட்ட ஆரம்பித்து விட்டனர். தன்னுடைய பிழைப்பில் மண் அள்ளி போட்டு விட்டாரே என எண்ணிய விமர்சகர் உடனடியாக நீண்ட பெரிய விளக்கத்தை கொடுத்து, தான் யாரிடமும் காசு கேட்பதில்லை என்று அந்த நடிகர் தன்மீது வீண் பழி சுமத்தியுள்ளார் அது தொடர்பான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

நிர்வாணமாக காட்டில்: ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நடிகர் வித்யுத் ஜமால் தனது சொந்த ஊரான இமயமலை அடிவாரத்துக்கு சென்று யாரும் இல்லாத தனி காட்டில் ஆடைகளை அணியாமல் ஒரு வாரம் எந்த ஒரு சுகபோகமும் இல்லாமல் காட்டுவாசி போல வாழ்ந்து வரும் பழக்கத்தை கொண்டிருப்பதாக சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X