twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் டென் வசூல் - முதலிடத்தில் விஜய் படங்கள்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களின் வெற்றி என்பது அவர்களின் படம் ஓடும் நாட்களையும், அவைகளின் வசூலையும் பொறுத்ததே.

    உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள், தங்களது அபிமான நடிகர்களின் படம் ஓடும் நாட்களையும், எத்தனை கோடி வசூல் ஆகிறது என்பதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    அந்தவகையில், சென்னையின் பிரபலமான திரையரங்கான வெற்றி தியேட்டரில் கடந்த 5 ஆண்டுகளாக அதிக வசூலைக் குவித்த படங்களின் டாப் டென் வரிசையை வெளியிட்டுள்ளனர்.

    வெற்றி டாப் டென்

    2012 முதல் 2016 வரை கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்து வசூல் குவித்த படங்கள் ஆண்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தகவலை வெற்றி தியேட்டர்ஸ் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    விஜய் படங்கள் சாதனை

    விஜய் படங்கள் சாதனை

    விஜய் நடித்து கடந்த ஐந்து வருடங்களில் வெளியான 7 படங்களில் 6 படங்கள் டாப் டென் வசூல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன. 2012-ம் ஆண்டில் 'துப்பாக்கி' மற்றும் 'நண்பன்' ஆகிய படங்கள் வசூலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

    கத்தி முதலிடம்

    கத்தி முதலிடம்

    2013-ல் வெளியான 'தலைவா' படம் ஒன்பதாவது இடத்திலும், 2014-ல் வெளியான 'கத்தி' படம் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது. 2014-ல் 'ஜில்லா' ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2015-ல் வெளியான 'புலி' ஃபேன்டஸி திரைப்படம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

    ரஜினியின் கபாலி

    ரஜினியின் கபாலி

    கடந்த வருடத்தில் வெளியான 'தெறி' திரைப்படம் மட்டும் டாப் டென் வசூல் பட்டியலில் மிஸ் ஆகியுள்ளது. 2016-ம் ஆண்டில் 'கபாலி' திரைப்படம் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

    English summary
    Vetri theater has released the top ten collected films over the past five years. This information was posted on the Twitter page by the owner of the Vetri theaters. Vijay has featured in 6 films in the top ten collections list of last five years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X